Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி பிறந்தநாளுக்கு லதா ரஜினிகாந்த் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ் கிப்ட்!!

08 டிச, 2012 - 17:11 IST
எழுத்தின் அளவு:

இந்தாண்டு டிசம்பர் 12ம் தேதி ரொம்பவே சிறப்பான ஆண்டு. காரணம் தேதி, மாதம், வருடம்(12.12.12) என மூன்றுமே 12-ல் வருகிறது. அதுமட்டும் இன்றி அன்றைய தினம் தமிழ் சினிமாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளும் கூட. பொதுவாகவே ரஜினி பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடும் அவரது ரசிகர்கள், இந்தாண்டு இப்படியொரு(12.12.12) சிறப்பு தினத்தில் வருவதால் இந்த பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

அன்றைய தினம், ஏ.வி.எம்., தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து ஏற்கனவே சூப்பர்ஹிட்டான சிவாஜி படம் இப்போது 3டியில் உருவாக்கப்பட்டு, அவரது பிறந்தநாளிலேயே ரிலீசாக இருக்கிறது. சிவாஜி 3டி படமே இந்தாண்டு ரசிகர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் பரிசு என்று ஏற்கனவே ரஜினி அறிவித்துள்ளார். மேலும் அன்றைய நாளில் ரஜினியை கவுரவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. கார்த்தி-அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள அலெக்ஸ் பாண்டியன் (மூன்று முகம் படத்தில் ரஜினி கேரக்டர் பெயர்) படத்தின் ஆடியோ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

ரஜினியின் தீவிர ரசிகரான நடிகரும், நடன மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், ரஜினி ஆல்பம் என்ற பெயரில் அவரது பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை  வெளியிட்டு உள்ளார். இப்படி பலரும் இந்தாண்டு ரஜினியை கவுரவித்து வர ஏற்பாடு செய்து வரும் நிலையில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் தனது கணவருக்காக பெரிய கிப்ட் ஒன்றை கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் உருவாக்கியுள்ள இது ரஜினி சாங் என்ற ஆல்பம் வெளியிட்டு விழாவில் பங்கேற்று, ஆல்பத்தை வெளியிட்டு பேசிய லதா ரஜினிகாந்த், 12.12.12 அன்று உலகமே கொண்டாடும் ஒருநாளில் எனது கணவர் பிறந்தநாள் வருவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. பலரும் பலவிதமாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர். நான் என்ன செய்ய போகிறேன் என்றால், அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்று கொடுக்க போகிறேன். அது என்ன கிப்ட் என்று அவரது பிறந்தநாளுக்கு முந்தைய தினமான 11ம் தேதி அறிவிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (87) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (87)

karthik - ramanathapuram kadampodai,இந்தியா
13 டிச, 2012 - 09:47 Report Abuse
 karthik DEAR YOU ALREADY TAMIL NADU SUPER STAR
Rate this:
ம.வீரபாண்டியன் - mayiladuthurai ,இந்தியா
12 டிச, 2012 - 19:44 Report Abuse
 ம.வீரபாண்டியன் இவர் நாட்டுக்காக என்ன செய்து இருக்கிறார் என்று கேட்கும் மக்களே! ஒன்றை சிந்தியுங்கள்!! மக்களுக்காக ஆட்சி செய்பவர்கள், மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள். முதலில் அதை பற்றி சிந்தியுங்கள். இவர் தன் உழைப்பின் மூலம்தானே ஊதியம் பெறுகின்றார். நம் நாட்டு ஒருசில அரசியல்வாதிகள் போல மக்களிடம் இருப்பதை கூட பிடுங்கி பிழைக்கவில்லையே! அப்படியே அரசியல் தலைவர்கள் மக்களுக்கு செய்தால் கூட தன்னுடைய சொந்த பணத்தில் செய்வதில்லையே! இதையெல்லாம் விட்டுவிட்டு ஒருவர் தன் உழைப்பில்,தனுக்குரிய தகுதியுடன் சம்பாதிக்கிறார் அதனை பற்றி ஏன் குறைகூருகிரீர்களே. எங்கே மனதை தொட்டு சொல்லுங்கள்?, உங்களுக்கு வரும் வருமானத்தில் இருந்து நீங்கள் ஏதேனும் ஒருசில ஏழைகளுக்கு உதவியதுண்டா, இதையெல்லாம் முதலில் எண்ணி பாருங்கள் அதன் பின்னால் பிறரை பற்றி குறை கூறலாம்.
Rate this:
tamilmaran - tambaram,இந்தியா
12 டிச, 2012 - 18:01 Report Abuse
 tamilmaran many more happy ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே thalaiva
Rate this:
மு.விஸ்வநாதன் - Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்
12 டிச, 2012 - 17:54 Report Abuse
 மு.விஸ்வநாதன் ஹாப்பி பிரத் டே தலைவா நீண்ட நாள் வாழ பரார்த்திக்கிறேன்
Rate this:
மங்கள கௌரி AD - Pollachi,இந்தியா
12 டிச, 2012 - 16:46 Report Abuse
 மங்கள கௌரி AD பிறந்தநாள் வாழ்த்துக்கள். நுறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். சூப்பர் ஸ்டார் மாதிரி இந்த வருடம் சூப்பர் தான் என் தலைவனுக்கு. நீங்கள் மேலும் எல்லாருக்கும் நன்மை செய்ய வேண்டும்.
Rate this:
மேலும் 82 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in