ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கும்கியில் யானையோடு சேர்ந்து ரொம்னஸ் காட்சிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என அப்படத்தின் இயக்குனர் பிரபுசாலமன் தெரிவித்துள்ளார். மைனா படத்திற்கு பிறகு பிரபுசாலமன் இயக்கியுள்ள படம் கும்கி. திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஹீரோவாகவும், லட்சுமி மேனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். அடுத்தவாரம் டிசம்பர் 14ம் தேதி படம் ரிலீசாக இருக்கிறது. படம் குறித்து பிரபுசாலமன் அளித்துள்ள பேட்டியில், கும்கி படத்தில் பிரதான பாத்திரமாக யானை நடித்திருந்தாலும், கதாநாயகனாக விக்ரம்பிரபு, லஷ்மி மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுக்கான காதல்(ரொமான்ஸ்) காட்சிகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். கும்கி படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக படத்தில் நடிகர்களை தேர்வு செய்திருந்தாலும், அதற்குமுன்பாகவே படத்தில் 12 அடி உயரமுள்ள யானையைத்தான் முதலில் நடிக்க தேடி வந்தேன். அப்படி ஒரு யானையை கண்டுபிடித்து அதற்கு 20 நாட்கள் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. கும்கி படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது, டிசம்பர் 14ம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்றார். கும்கி படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமான ஞானவேல் ராஜா உலகம் முழுக்க ரிலீஸ் செய்கிறார்.