Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு : இன்று விசாரணைக்கு வருகிறது

19 ஜூலை, 2021 - 10:46 IST
எழுத்தின் அளவு:
Vijay-case-to-be-hear-today

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். கடந்த 2012ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, விஜய் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் வரி என்பது நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியிருந்தார். நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும் வரி ஏய்ப்பு செய்தால் அது தேசத் துரோகம். எனவே, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கான வரியை நடிகர் விஜய் 2 வாரங்களில் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் குமரேசன் தெரிவித்தார். அதன்படி விஜய் சென்னை ஐகோர்ட்டில் ரூ.1 லட்சம் அபாரம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். அதில், வாகன நுழைவு வரியில் மீதமுள்ள தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் அபாரம் விதிக்கப்பட்டதை எதிர்த்தும், தீர்ப்பில் தன்னைப்பற்றி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். விஜய்யின் மேல்முறையீடு வழக்கு இன்று காலை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.என்.மஞ்சுளா இருவர் அடங்கிய பெஞ்சு முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
1 கோடி - தனுஷ் செய்த சாதனை1 கோடி - தனுஷ் செய்த சாதனை பொது இடத்தில் காதலருக்கு முத்தம் : ஸ்ருதிஹாசன் மீது ரசிகர்கள் வருத்தம் பொது இடத்தில் காதலருக்கு முத்தம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vyjayanthy. S - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19 ஜூலை, 2021 - 12:53 Report Abuse
Vyjayanthy. S Beast பட audio launch விழாவிலே நான் உங்களை (மத்திய அரசு) பாத்துக்கறேன். குப்பை படத்தை எப்படி சூப்பர்ஹிட் படமா மாத்தணும் என்று எனக்கு , தயாரிப்பாளருக்கும் தெரியும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in