Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல் பிரிமியர் ஷோவிலேயே விற்பனையானது அருள்நிதி படம்

17 ஜூலை, 2021 - 14:33 IST
எழுத்தின் அளவு:
Arulnidhi-movie-sold

களத்தில் சந்திப்போம் படத்திற்கு பிறகு சத்தமே இல்லாமல் அருள்நிதி ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை யு டியூப் சேனலான எருமசாணி புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கி உள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து சமீபத்தில் திரையுலகின் முன்னணியினருக்கு போட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த பலரும் அதனை வாங்கிக் கொள்ள முன்வந்துள்ளனர். இதில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை வாங்கி உள்ளது.

இதுகுறித்து அதன் உரிமையாளர் பி.சக்திவேலன் கூறியிருப்பதாவது: அருள்நிதி மிக வித்தியாசமான களங்களில், ரசிகர்கள் ரசிக்கும்படியான படங்களையும், குடும்பத்தினர் கொண்டாடும் படங்களையும், தொடர்ச்சியாக தந்துவருகிறார். அவரது சமீபத்திய படமான களத்தில் சந்திப்போம் திரைப்படம் திரைத்துறையில் அவரது மதிப்பை உயர்த்தியிருக்கிறது.

ஒரு நண்பரின் மூலமாக அவரது இந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் முடியும் வரையிலும் படம் எவ்வாறு செல்லும் என்பதை கணிக்கமுடியாதபடி, பல ஆச்சர்யங்களை தந்தது. அனைத்து வகையான ரசிகர்களும் கொண்டாடும் அம்சங்கள் படத்தில் நிரம்பியிருந்தது. படம் முடிந்த கணத்திலேயே படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்று விட வேண்டும் என்கிற வேட்கை என்னுள் உண்டானது.

அருள்நிதியின் நடிப்பு மிக அபாரமானதாக இருந்தது. இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர் முன்னணி நட்சத்திரங்களுல் ஒருவராக உயர்வார். பல படங்களில் பெருமையுடன் வழங்குகிறோம் என்பதை வெறும் வார்த்தையாக உபயோகிப்பார்கள். ஆனால் நாங்கள் இப்படத்தை மிக பெருமையுடன் வழங்கவுள்ளோம். இப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். என்றார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பெரிய திரைக்கு திரும்பும் ஜித்தன் ரமேஷ்பெரிய திரைக்கு திரும்பும் ஜித்தன் ... நட்டிக்கு நான்கு ஹீரோயின் நட்டிக்கு நான்கு ஹீரோயின்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

KavikumarRam - Indian,இந்தியா
20 ஜூலை, 2021 - 19:16 Report Abuse
KavikumarRam இனிமே அப்படித்தான. வெளங்கிரும். பாவம் வாங்குனவன் கதி அதோகதி தான்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
19 ஜூலை, 2021 - 11:14 Report Abuse
Girija படம் எடுக்காமயே விற்று நூறு நாள் ஓடிய சாதனையை விரைவில் நிகழ்த்த வாழ்த்துக்கள்.
Rate this:
bal - chennai,இந்தியா
18 ஜூலை, 2021 - 14:06 Report Abuse
bal விற்பனை ஆகலேன்னா விட்டுடுமா திமுக ?
Rate this:
17 ஜூலை, 2021 - 16:27 Report Abuse
ilaiyaraja muthu அவனுக்கு குடும்பமே வாங்கிருச்சா..... இதெல்லாம் ஒருபொழப்பு......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in