Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவில் நடிக்க பண உதவி கேட்கும் சீரியல் நடிகர்

16 ஜூலை, 2021 - 15:45 IST
எழுத்தின் அளவு:
Karthikraj-request-fans-to-send-money-to-act-in-movie

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் நடித்தவர் கார்த்திக் ராஜ். இவர் கடந்த ஆண்டு திடீரென தொடரிலிருந்து நீக்கப்பட்டார். நீக்கப்பட்டதற்கான காரணத்தை சேனலும் தெரிவிக்கவில்லை. கார்த்திக் ராஜும் தெரிவிக்கவில்லை. விரைவில் இன்னொரு ப்ராஜெக்டில் சந்திக்கிறேன் என்று மட்டும் கூறியிருந்தார். இதற்கிடையில் கார்த்திக் ராஜ் சினிமாவில் நடிக்கவும் முயற்சி செய்தார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கார்த்திக் ராஜ், தான் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் அதற்கு பண உதவி செய்யுங்கள் என்றும் கேட்டிருக்கிறார். அவர் மேலும் அந்த வீடியோவில் பேசி இருப்பதாவது:

என்னுடைய அடுத்த திட்டம் குறித்துப் பேச வேண்டும் என்று காத்திருந்தேன். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. காரணம் என்னைச் சிலர் எந்த திட்டமும் செய்ய விடாமல், அரசியல் செய்து கொண்டிருகிறார்கள். சிலர் பின் வேலைகளைச் செய்து நான் படம் நடிக்க முடியாதபடி செய்துவிட்டனர். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் உன்னால் முடிந்தால் படம் நடித்துக் காட்டு என்று சவால் விடுகிறார்கள்.

உங்கள் ஆதரவு இருந்தால், கண்டிப்பாக நல்ல படத்தில் நடிக்க என்னால் முடியும். அந்த நம்பிக்கையில் கே ஸ்டுடியோஸ் என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன். பெரிதாக முதலீடு செய்து பெரிய படம் எடுக்கும் அளவுக்கு எனக்குப் பின்னணி இல்லை. என் வாழ்க்கையில் இதுவரை எல்லாச் சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவாக இருந்தது நீங்கள் மட்டும் தான்.

இதுவரை நான் உங்களிடம் எதுவும் கேட்டதில்லை. முதல் முறையாகக் கேட்கிறேன். சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, உங்களால் எவ்வளவு தொகை முடியுமோ அதை எனக்கு அனுப்புங்கள். நீங்கள் ஆதரவளித்தால் தான் இது முடியும் என தெரிவித்துள்ளார்.

மற்றொரு வீடியோவில் இதுவரை 7 முதல் 8 லட்சம் வரை பணம் வந்துள்ளது. இன்னும் ஒருவாரம் பணம் வரும் என நம்புகிறேன். அதற்கு மேல் நான் நினைத்த தொகை வரவில்லை என்றால் கண்டிப்பாக இந்த படத்தை என்னால் பண்ண முடியாது. அதற்காக நீங்கள் கொடுத்த பணத்தை செலவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. மீண்டும் உங்களுக்கே திருப்பி கொடுத்துவிடுவேன். யாரும் தவறாக எண்ண வேண்டாம். நிச்சயம் நான் நினைத்த பணம் வரும் என நம்புகிறேன். பார்க்கலாம் இந்த ஒரு வாரத்தில் என்ன நடக்கிறது என்று...

இவ்வாறு கார்த்திக் ராஜ் பேசியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
வெற்றி படத்தில் 2 ஹீரோயின்வெற்றி படத்தில் 2 ஹீரோயின் தமிழிலும் வெளியாகிறது லிங்குசாமியின் தெலுங்கு படம் தமிழிலும் வெளியாகிறது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

navasathishkumar - MADURAI,இந்தியா
22 ஜூலை, 2021 - 13:55 Report Abuse
navasathishkumar நல்ல படம் எங்கே ஓடுது ? தியேட்டரில் இப்ப வெளியிட முடியுது .. ? அப்படினாலும் வசூல் வருமா/ தம்பி இப்போதைக்கு சீரியல் தான் பெஸ்ட் .. இல்லை நல்ல ஹோட்டல் போட்டு ஜோமோடாவில் வித்து லாபம் பாரூ ..
Rate this:
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
18 ஜூலை, 2021 - 08:33 Report Abuse
தாமரை மலர்கிறது தம்பி வாழைப்பழம் சாப்பிடணுமாம். உங்களை உரிச்சு தர சொல்றாரு. ஒவ்வொருத்தரும் பெட்ரோல் போட தலையை சொறிஞ்சிகிட்டு இருக்கும்போது, கிச்சு கிச்சு மூட்டிவிட்டுக்கிட்டு இருக்கான்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
18 ஜூலை, 2021 - 04:15 Report Abuse
meenakshisundaram அன்று நடிக்க வந்த பாரதிராஜாவை பார்த்து சிவாஜி கேட்டது -உங்க ஊர்லே முகம் பார்க்கிற 'கண்ணாடி 'கிடையாதா ?
Rate this:
Suresh -  ( Posted via: Dinamalar Android App )
17 ஜூலை, 2021 - 10:52 Report Abuse
Suresh அப்படி ஒரு மம் நீ நடிக்க வேண்டிய அவசியம் கிடையாது....
Rate this:
17 ஜூலை, 2021 - 05:41 Report Abuse
சூரியா இவ்ளோ கஷ்டப்பட்டு, நீ நடித்துத்தான் ஆகவேண்டும் என யார் உன்னைக் கட்டாயப்படுத்துகிறார்கள்?
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in