Advertisement

சிறப்புச்செய்திகள்

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்-ல் வெளியிடுகிறார் கமல்!!

06 டிச, 2012 - 15:38 IST
எழுத்தின் அளவு:

எதிலும் புதுமைகளை படைப்பதில் கமலுக்கு நிகர் கமல் தான். ஹாலிவுட் தரத்தில் தான் உருவாக்கியுள்ள விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாக டி.டி.எச்.-ல் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார். இதனால் தாங்கள் பெருமளவு பாதிக்கப்டுவோம் என்று தியேட்டர் அதிர்பர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கமல் தரப்புக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் பிரச்னை உருவாகியுள்ளது.

கமல், நடித்து, இயக்கி, பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள படம் விஸ்வரூபம். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கமல் ஜோடியாக ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் நடித்துள்ளனர். ஆரோ 3டி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஹாலிவுட் தரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் ஜனவரி 11ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகிறது. நாளை 7ம் தேதி படத்தின் ஆடியோ ரிலீசை வைத்துள்ளார்.

இந்நிலையில், விஸ்வரூபம் ரிலீசாகும் அதேநாளில் 8 மணிநேரத்திற்கு முன்பாக டி.டி.எச். சேவை மூலம் டி.வி.யில் ஒளிபரப்பினால் திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க முடியும் என்றும், தியேட்டர்களுக்கு போகாதவர்களையும் படம் பார்க்க வைக்க முடியும் என்றும் கமல் கருதுகிறார். இதற்காக பிரபல டி.டி.எச். நிறுவனங்களுடன் பெரும் தொகைக்கு கமல் பேசியுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளையும் கமல் சந்தித்து பேசி அவர்களிடம் ஆதரவு கேட்டுள்ளார். திரையுலக சங்கத்தின் கூட்டு கூட்டத்தை கூட்டி இதுபற்றி முடிவு செய்யலாம் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். அதேசமயம் தியேட்டர் உரிமையாளர்கள் இதனை எதிர்த்துள்ளனர். கமலை பின்பற்றி எல்லா படங்களையும் டி.டி.எச். மூலம் ஒளிபரப்ப முடிவெடுத்தால் தியேட்டர்களுக்கு கூட்டம் வராது என அவர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக முக்கிய முடிவு எடுக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (41) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (41)

மொக்கையன் - chennai ,இந்தியா
08 டிச, 2012 - 14:14 Report Abuse
 மொக்கையன் இது கமலோட விஸ்வரூபம் ... எவ்ளோ நாள் தான் அவர் மட்டும் நஷ்ட பட்டு படம் edukkurathu படம் vetriyo tholviyo avaru kaasai eduthiduvaaru
Rate this:
ram - chennai,இந்தியா
08 டிச, 2012 - 13:48 Report Abuse
 ram இந்த படம் உருப்படாது
Rate this:
கபிலன் - madurai ,இந்தியா
07 டிச, 2012 - 21:09 Report Abuse
 கபிலன் ...படம் புரியிற படி இருக்குமா ?
Rate this:
krishnakumar - singapore  ( Posted via: Dinamalar Android App )
07 டிச, 2012 - 20:58 Report Abuse
krishnakumar நல்ல முடிவு!
Rate this:
ராஜா அருள் மொழி வர்மன் - Boompukar ,டொமினிக்கா
07 டிச, 2012 - 13:02 Report Abuse
 ராஜா அருள் மொழி வர்மன் வெளிநாட்டு முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வெளிநாட்டு கண்டுபிடிப்புகளுக்கும் வியாபார யுத்திகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். DTH இல் வெளிஇட்டால் திருட்டு VCD குறையும் என்பது கமல் தன் சொந்த வியாபாரத்துக்காக சொல்லும் ஒரு சாமர்த்தியமான பொய். விலை ஒப்பீட்டிலேயே DTH தோற்றுவிடும். தவிர, எத்தனை பேரிடம் DTH இருக்கிறது? காசு கொடுக்காமல் படம் பார்ப்பதை ஒழிக்க வேண்டும் என்றால் இன்டர்நெட்டில் வெளியிடுவதை தான் தடுக்க வேண்டும். இன்டர்நெட்டில் ஆயிரம் வெப்சைட் இல் ஒரு படம் வெளியிடபடுகிறது. அதை தடுக்க முடியுமா ? அதற்கான முயற்சியில் யாரும் இறங்கவே இல்லையே ஏன்? காரணம் பல படங்கள் லாபமே சம்பாதிக்கின்றன. எப்படி? எல்லா ஊரிலும் தியேட்டர்கலில் பெரிய படம் என்றால் 60 ரூபாயக்கும் சிறிய படம் என்றால் 40 ரூபாயக்கும் டிக்கெட் விற்கப்படுகிறது. டிக்கெட்டில் 3 ரூபாய் தான் போட்டிருக்கும். salestax , incometax ஆட்கள் இதை பார்க்கும்போது மட்டும் கண்ணை புடனியில் வைத்துக்கொள்வார்கள் . இது மாறாத வரை இன்டர்நெட் மற்றும் திருட்டு VCD போன்றவற்றை ஒழிக்க முடியாது.
Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in