Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருங்கள் : விஜய்க்கு கோர்ட் கண்டிப்பு - 1 லட்சம் அபராதம்

13 ஜூலை, 2021 - 14:24 IST
எழுத்தின் அளவு:
Chennai-High-court-fine-to-actor-vijay-on-luxury-car-tax-evasion

சென்னை : தனது காருக்கு வரி விதிக்க தடைக்கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்யை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. வரி என்பது நன்கொடை அல்ல என்றும் சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். பாக்ஸ் ஆபிசிலும் நம்பர் 1 நடிகராக உள்ளார். அதோடு தற்போதைய நிலவரத்தில் ரூ.100 கோடி சம்பளம் வாங்குகிறாராம். இதனிடையே இங்கிலாந்தில் இருந்து கடந்த 2012ல் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விஜய்யின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ததுடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். இந்த அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும் நீதிபதி கூறுகையில், ‛சமூக நீதிக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது. சினிமா நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். நிஜ வாழ்வில் ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது. வரி செலுத்துவது என்பது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல, குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு. என கருத்து தெரிவித்தார்.


வரிகட்டுங்க_விஜய் டிரெண்டிங்


விஜய்க்கு சென்னை ஐகோர்ட் அபராதம் மற்றும் கண்டனம் தெரிவித்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. #actorvijay, #வரிகட்டுங்க_விஜய் என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. இதில் பதிவான சில கருத்துக்கள்..

‛‛மாசம் 10 ஆயிரம் சம்பளம் வாங்குறவன் கூட ஒழுங்கா வரி காட்டுவான்... 100 கோடி வாங்கி என்ன பிரோயோஜனம்''. ‛‛கோடிகளில் சம்பளம் வாங்கும் உங்களால் சில லட்சங்களில் வரி கட்ட முடியாதா... ஊருக்கு தான் ஹீரோ, உள்ளுக்குள்ள ஜீரோ...''. ‛‛தான் நடிக்கும் படங்களின் ஆடியோ விழாக்களில் எல்லாம் அரசாங்கத்தை பற்றி ஏகத்திற்கும் விமர்சனம் செய்யும் இவர், முதலில் ஒழுங்காக வரி கட்டிவிட்டு பின்னர் மற்றவர்களை குறை சொல்லட்டும்''. ‛‛நாங்க ரோல்ஸ் ராய்ஸ் கார் தான் வச்சுருக்கோம், சொகுசு கார் அல்ல, அதனால் வரி கட்ட மாட்டோம்...''. ‛‛விஜய் முதலில் சரியான வக்கீலிடம் ஆலோசனை கேட்க வேண்டும். நாட்டுக்கு வரி செலுத்துவது ஒவ்வொருவரின் கடமை. அதை செய்யாவிட்டால் அபராதம், சிறை தண்டனை விக்கப்படும். பிறகு எதற்கு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் விஜய். ஒருவேளை இந்த விஷயம் கூட அவருக்கு தெரியாதோ...''. இப்படி பலரும் கருத்து பதிவிட்டு வருவதோடு வேடிக்கையான பல மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே விஜய்க்கு எதிராக டுவிட்டரில் நெகட்டிவ் கமெண்ட்கள் வைரலாக, அவரது ரசிகர்கள் வழக்கம் போல் விஜய் செய்தது எதுவும் தப்பில்லை என்கிற ரீதியில் #WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டாக்கை டிரெண்ட் செய்தனர்.


Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
இரண்டு படங்களோடு நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா ரஜினி?இரண்டு படங்களோடு நடிப்புக்கு ... என்னம்மா, இப்படி போட்டோ போடறீங்களேம்மா... என்னம்மா, இப்படி போட்டோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
14 ஜூலை, 2021 - 12:46 Report Abuse
Sridhar இதுல முக்கியமான விஷயத்தை யாரும் கவனிச்சதா தெர்ல. இந்த நுழைவுவரி கட்டலேன்னா, வண்டியை RTO விடம் ரிஜிஸ்டர் செய்யமுடியாது, அதாவது நம்பர் பிளேட் கிடைக்காது. அப்படீன்னா வண்டியை வெளியே எடுத்து ஓட்ட முடியாது. இப்போ கேள்வி என்னான்னா, 9 வருசமா, அவுரு வண்டிய வீட்டிலேயே பூட்டியா வச்சிருந்தாரூ? அப்படி பொத்தி வைக்கறதுக்கு யாராச்சும் 9 கோடி கொடுத்து கார் வாங்குவாங்களா? இவுரு அந்த காரை வெளியே எடுத்து வந்திருந்தார் என்பதற்கு ஆதாரம் இருந்துச்சுன்னா, இவுரு மேலே குத்தம். ஆனா, நுழைவரி கட்டாமலேயே ரெஜிஸ்டர் பண்ணி நம்பர் பிளேட் கொடுத்திருந்தார்கள் என்றால், எவன் சட்டத்தை மீறி கொடுத்தான் என கண்டறிஞ்சு தண்டனை கொடுக்க வேண்டும்.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
14 ஜூலை, 2021 - 12:35 Report Abuse
Sridhar நீதிபதிகள் இப்போதெல்லாம் ரொம்பவே அத்துமீறுகின்றனர். அந்த நடிகர் வரி கட்டமுடியாது என கூறவில்லையே? ஒரு குடிமகனுக்கு இருக்கிற உரிமையை பயன்படுத்தி சட்டத்திற்கு உட்பட்டு இந்த வரிக்கு விளக்கு அளிக்க வாய்ப்பு இருக்கிறதா என முயற்சித்திருக்கிறார். இல்லை என்றால், கட்டப்போகிறார். இதே நுழைவு வரி சச்சின் டெண்டுகருக்கு விலக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. இந்த வரி சம்பந்தப்பட்ட சட்ட விதிகள் மிக தெளிவாக இருக்கும்பட்சத்தில், இவருடைய பிராதை கோர்ட் எவ்வாறு முதலில் ஏற்றுக்கொண்டது? மேலும் 2012 வருடம் நடந்த இவ்விஷயத்திற்கு தீர்ப்பளிக்க கோர்ட்டுக்கு 9 வருஷமாயிருக்கிறது. வரி கட்டுவது எப்படி ஒவ்வொரு குடிமகனின் தேசிய கடமையோ, அதே போல் நேரத்தை வீணடிக்காமல் தன பணியை செய்வதும் ஒவ்வொரு அரசு அமைப்புகளின் கடமை என்று எதிர்பார்ப்பது தவறாகுமா?
Rate this:
14 ஜூலை, 2021 - 05:30 Report Abuse
விஜய் PLEASE DON'T REPEAT THE COMMENT
Rate this:
14 ஜூலை, 2021 - 05:30 Report Abuse
விஜய் PLEASE DON'T REPEAT THE COMMENT
Rate this:
14 ஜூலை, 2021 - 05:30 Report Abuse
விஜய் PLEASE DON'T REPEAT THE COMMENT
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in