ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காமெடி நடிகர் பாண்டு மகன், பிண்டு ஹீரோவாக அறிமுகமாகும் படம் வெள்ளச்சி. பிண்டுவுக்கு ஜோடியாக சுசித்ரா உன்னி நடிக்கிறார். வேலுவிசுவநாத் இயக்குகிறார். இளையராஜா மகள் பவதாரிணி இசை அமைக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையை வெளியிட்டு இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது,
சென்னையின் டிராபிக்கும், பரபரப்பான சினிமா வாழ்க்கையும் பிடிக்கவே இல்லை. 1964ல் சினிமாவுக்கு வந்தேன். உடம்புல தீப்பிடிச்சவன் மாதிரி ஓடிக்கிட்டே இருந்தேன். வயசாயிட்டுதில்ல அதான் இப்போ கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுது. ஊர்பக்கமா ஒதுங்கி இருக்கேன். அங்கேயும் சும்மா இருக்க முடியாம ஒரு படம் எடுத்துக்கிட்டிருக்கேன். கண்ணுல பட்டவங்களையெல்லாம் அதுல நடிக்க வச்சிருக்கேன். சினிமாவுக்கு இப்போ பெரு வெள்ளமா, புது வெள்ளமா இளைஞர்கள் புறப்பட்டு வர்றாங்க. பெருசா சாதிக்கிறாங்க. ஒரு காலத்துல சினிமாவுக்குள்ள யாரும் நுழைய முடியாது, ஸ்டூடியோ காம்பவுண்டு சுவரை பார்த்துட்டு திரும்ப வேண்டியதுதான். இப்போ நிறைய மாறிப்போச்சு. திறமை இருக்குறவங்க யார் வேணாலும் சினிமாவுக்கு வரலாம். வர்றாங்க. சாதிக்கிறாங்க. சீனியர்ங்ற முறையில அவுங்கள வாழ்த்துறேன். என்றார்.