Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியல் ‛நோ, ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு : ரஜினி அறிவிப்பு

12 ஜூலை, 2021 - 11:55 IST
எழுத்தின் அளவு:
No-politics,-Rajini-Makkal-Mandram-disolved-says-Rajini

வருங்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை. ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுகிறது, முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என ரஜினி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றபடி அவரும் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்னையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என திடீரென அறிவித்தார். இதனைத்தொடர்ந்து ‛அண்ணாத்த திரைப்படத்தின் சூட்டிங் பணியில் பிசியாக இருந்தார். படப்பிடிப்பை முடித்த ரஜினி, டப்பிங் பணியை ஆரம்பிப்பதற்குள், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பினார்.




இந்நிலையில், இன்று (ஜூலை 12) சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னதாக தனது வீட்டில் இருந்து கிளம்பும் போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என சொன்னப்பிறகு என் மக்கள் மன்ற நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்திக்க முடியவில்லை. அண்ணாத்த திரைப்பட சூட்டிங் தாமதமானது, அதன்பிறகு தேர்தல் வந்தது, கோவிட் பரவல் இருந்தது. அதற்கு பிறகு, என்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக நான் அமெரிக்கா சென்று திரும்பியுள்ளேன்.




மக்கள் மன்றத்தை தொடரலாமா?, அதன் பணி என்ன? போன்ற கேள்விகள் மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களுக்கு உள்ளன. அதேப்போல, எதிர்காலத்தில நான் அரசியலுக்கு வருவேனா, இல்லையா போன்ற கேள்விகளும் இருக்கிறது. இது போன்ற பல விஷயங்களை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு சொல்கிறேன் என்றார்.

அரசியல் ‛நோ - ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு

இந்நிலையில் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பிறகு ரஜினி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது : ‛‛ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன, நிலை என்ன என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளதுது. அதை விளக்க வேண்டியது என் கடமை.




நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.

கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க் தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!!

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
ஹிந்தியில் சூரரைப்போற்று - சூர்யாவே தயாரிக்கிறார்ஹிந்தியில் சூரரைப்போற்று - சூர்யாவே ... விடுதலை : சூரி வைத்த சஸ்பென்ஸ் விடுதலை : சூரி வைத்த சஸ்பென்ஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Loganathaiyyan - Kolkata,இந்தியா
13 ஜூலை, 2021 - 18:09 Report Abuse
Loganathaiyyan நிச்சயம் ரஜினி அரசியலுக்கு மிக மிக தகுதியானவர்???அரசியல் என்றால் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தது. மக்கள் மன்றம் கலைப்பு ரசிகர் மன்றம் நிலைப்பு ரெண்டுக்கும் என்னய்யா வித்தியாசம் ரெண்டும் ஒரே சகதியில் ஊறிய மட்டைகள் வெறும் பேரை மட்டும் மாற்றி வைத்து விட்டு???? உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று தன்னைத்தானே ஜோட்டால் அடித்துக்கொள்ளவேண்டும் இந்த ரஜினி மக்கள் என்னும் ரஜினி ரசிகர் மன்ற மக்கள்.
Rate this:
13 ஜூலை, 2021 - 10:52 Report Abuse
BKrishna Murthy.T அய்யா ரஜினி அவர்களே,நீங்கள் அதையே செய்யவும்...நன்றி..
Rate this:
Asagh busagh - Munich,ஜெர்மனி
13 ஜூலை, 2021 - 04:37 Report Abuse
Asagh busagh PLEASE CHANGE YOUR USER NAME
Rate this:
J. G. Muthuraj - bangalore,இந்தியா
12 ஜூலை, 2021 - 21:05 Report Abuse
J. G. Muthuraj என்னையும் என் நடிப்பையும் மாத்திரம் ரசியுங்கள்.....மக்கள் பணி என்பதெல்லாம் செய்ய வேண்டாம் என்கிறார். பயங்கரமான சுயநலம்.....
Rate this:
12 ஜூலை, 2021 - 20:33 Report Abuse
சமநிலை மூர்த்தி அண்ணாத்த படம் முடியப்போகுது, ரசிகர்கள் தயவு வேணுமில்ல. கரெக்டா மீட்டிங் போட்டு இருக்கார். அவரு அப்போதைய காலத்தில் இருந்து கரெக்டா தான் இருக்காரு. நாம்தான் புரியாமல் வருவாருனு காத்திருக்கோம். இப்ப புரிஞ்சதா சகோதரர்களே!, வாங்க புள்ள குட்டிகள படிக்க வைப்போம்.
Rate this:
விசு பாய் , சென்னைவிசிலடிச்சான் குஞ்சுகளுக்கு எப்போதும் புரியாது....
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in