Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

சஸ்பென்ஸை உடைத்தார் மணி! கார்த்திக் மகன் இவர் தான்!!

Karthick Son Gauthams first look in Kadal
இயக்குனர் மணிரத்னம் தற்போது இயக்கி வரும் படம் கடல். இதில் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாகவும், ராதா மகள் துளசி நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். கடற்புறத்தில் நடக்கும் கதை தான் கடல். பொதுவாக மணிரத்னம் படம் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அவர் இயக்கும் படம் வெளியாகும் வரை படத்தின் கதை பற்றி வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்து வருவார். கடல் படத்திலும் அதே நிலை தான். ஆனால் இதில் இன்னும் ஒருபடி மேலே போய் இப்படத்தில் நடிக்கும் ஹீ‌ரோ கவுதம் மற்றும் ஹீரோயின் துளசி ஆகியோரின் முகத்தை கூட வெளியில் தெரியாத அளவுக்கு ரகசியம் காத்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இதுதான் அறிமுகப்படம். அதனால் தான் இத்தனை ரகசியம். இரு தினங்களுக்கு முன்னர் படத்தின் முதல் பார்வை என்ற பெயரில் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார் மணி. அதில் ஹீரோ கவுதமின் முகம் சுத்தமாக தெரியவில்லை. இதனால் கவுதம் எப்படி இருப்பார் என்ற ஆவல் எல்லோர் மனதிலும் நிலவியது.

இந்நிலையில் இப்போது அந்த சஸ்பென்ஸை உடைத்துள்ளார் மணி. கடல் ஹீரோவின் முதல் லூக் என்ற பெயரில் கவுதமின் படத்தை வெளியிட்டு இருக்கிறார். நீங்கள் அருகில் பார்க்கும் அவர் கார்த்திக்கின் மகன் கவுதம். இந்தபடம் கூட அவரின் முகம் சரியாக தெரியவில்லை என்று நீங்கள் நினைப்பது எங்களுக்கு புரிகிறது, என்ன செய்வது கொஞ்சம் ‌கொஞ்சமாகத்தான் மணிரத்னம், கவுதம் படத்தை வெளியிடுவார் போலத் தெரிகிறது. அடுத்து அவர் வெளியிட இருக்கும் படத்திலாவது கவுதமின் முகம் நன்றாக தெரியும் அளவுக்கு இருக்கும் என்று உங்களுடன் சேர்ந்து நாங்களும் ஆவலாய் எதிர்பார்க்கிறோம்.

Tags »
Manirathnam, Kadal, Gautham, First look, மணிரத்னம், கடல், கவுதம்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (32)

SARAVANAN - HOSUR,இந்தியா
2013-01-27 21:15:43 Report Abuse
 SARAVANAN SUPER HIT
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
manivannan - chennai,இந்தியா
2013-01-08 12:17:36 Report Abuse
 manivannan waiting for our little நவரச நாயகன்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Manikandan - Coimbatore,இந்தியா
2013-01-07 20:17:08 Report Abuse
 Manikandan பாமரனும் புரியுற மாதிரி படம் இருந்தா கண்டிப்பா ஓடும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
rahul - coimbatore,இந்தியா
2012-12-18 15:22:27 Report Abuse
 rahul ரொம்ப பொத்தி வைக்க kudathu
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
RAJKUMAR - sivakasi,இந்தியா
2012-12-12 23:01:08 Report Abuse
 RAJKUMAR மறவர் குல மகுடத்தில் இன்னும் ஒரு வைரம்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in