சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |
எந்திரன் மாதிரியான படங்களில் நடிக்க ரஜினியால்தான் முடியும்; என்னால் அப்படி நடிக்க முடியும் என தோன்றவில்லை, என்று நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் கூறியுள்ளார். எந்திரன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் விஞ்ஞானியாகவும், ரோபோவாகவும் வந்து கலக்கியிருந்தார். ரோபோ ரஜினி, ஐஸ்வர்யா மீது காதல் கொள்ளும் காட்சிகள் அனைவரையும் கவர்ந்தன. இந்நிலையில் எந்திரன் கதாபாத்திரம் போல் அமைந்தால் அதில் நடிப்பீர்களா என்று ரஜினிகாந்தின் மருமகனான தனுஷிடம் பேட்டியொன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தனுஷ், எந்திரன் போன்ற கதாபாத்திரம் எல்லாம் சூப்பர் ஸ்டாராக இருப்பவர்களால் தான் முடியும். ரஜினி தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர். அது போன்ற கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை, என்று கூறியுள்ளார்.