Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலேசியாவில் யுவனின் நேரடி இசை நிகழ்ச்சி!

05 டிச,2012 - 15:11 IST
எழுத்தின் அளவு:

மலேசியாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி வருகிற 15ம்தேதி நடைபெற உள்ளது. 1997ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன்சங்கர் ராஜா. மன்மதன், பருத்திவீரன், சென்னை 600 028, சரோஜா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி..., போகாதே போகாதே... போன்ற சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பிரியாணி படத்திற்கு இசையமைத்து வரும் யுவனுக்கு, இது 100வது படமாகும். இதனை கொண்டாடும் வகையில் டிசம்பர் 15ம்தேதி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கிறார் யுவன். இந்த நிகழ்ச்சியில் யுவன், தன்னுடைய குழுவினருடன் சேர்ந்து ரசிகர்களுக்கு நேரடி இசை விருந்து அளிக்கவிருக்கிறார். இந்நிகழ்ச்சிக்காக கோலாலம்பூரில் பிரம்மாண்டமான அரங்கு தயாராகி வருகிறது.

இவ்விழாவில் தனுஷ், கார்த்தி, சிம்பு, ஜீவா, விஷால், ஆர்யா, சினேகா, ஜெயம் ரவி, பிரசன்னா, ஜெய், கிருஷ்ணா உள்ளிட்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். பல முன்னணி பாடகர்கள் கலந்து கொண்டு யுவனின் இசைக்கு மேலும் வலுசேர்க்கவிருக்கின்றனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும், யுவனின் அப்பாவுமான இளையராஜா கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சி இசை ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம் மூலம் ஹீரோ ஆகிறார் ஜெமினி பேரன்!விளம்பரம் மூலம் ஹீரோ ஆகிறார் ஜெமினி ... இந்தி மங்காத்தாவில் அஜித்! வெங்கட்பிரபு திட்டம்!! இந்தி மங்காத்தாவில் அஜித்! ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Daisy
    • டெய்சி
    • நடிகர் : ,....
    • நடிகை : ,...
    • இயக்குனர் : ,ஸ்ரீநாத் ராமலிங்கம்
    Tamil New Film Oru kadhal oru kalyanam
    Tamil New Film Takkar
    • டக்கர்
    • நடிகர் : பிரேம்ஜி அமரன்
    • நடிகை : ,மீனாட்சி தீக்ஷித், அருந்ததி
    • இயக்குனர் : ,ஜெயபால்
    Tamil New Film V
    • வி
    • நடிகர் : ,ராகவ், சத்யதாஸ், ரிஷி, திவ்யன்
    • நடிகை : ,ருதியா, அஸ்வினி, நிமா
    • இயக்குனர் : ,டாவன்சி
    Advertisement
    Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in