சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
ஹன்சிகாவுக்கு இப்போது சிம்பு மீது காதல் முத்திப்போச்சாம். படப்பிடிப்பில் கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் சிம்புக்கு எஸ்.எம்.எஸ்களை பறக்க விடுகிறார். பதிலுக்கு சிம்புவிடமிருந்து பறந்து வருகிறது எஸ்.எம்.எஸ். இவர்களின் எஸ்.எம்.எஸ்-ஆல் செல்போன் கீ போர்டே தேஞ்சுபோகுதாம். தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் இன்னிக்கு என்ன சீன் எடுத்தாங்க எப்படி நடிச்சேன்னு அக்கறையோடு விசாரிக்கிறாராம் சிம்பு. அண்மையில் நயன்தாரா ஒரு பார்ட்டி வைத்தார். அதற்கு சிம்புவுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் நயன். சிம்புவும் கிளம்பத் தயாரானார். கேள்விப்பட்ட ஹன்சி, சிம்புவை போனில் பிடித்து தாளித்து எடுத்துவிட்டாராம். பார்ட்டிக்கு போனா என்னை மறந்துடு என்கிற ரேஞ்சில் பேச சிம்பு பார்ட்டிக்கு போகாமல் தவிர்த்துவிட்டாராம். ஹன்சிகா, சிம்பு காதல்தான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.
காதல், திருமணம் வரைக்கும் போகும்னு சொல்றாங்க. ஆனா சிம்புவோட அம்மாவுக்கு இவுங்க காதல் பிடிக்கலையாம். அதே மாதிரி சிம்புவைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கும் ஹன்சிகாவின் அம்மாவுக்கும் இவர்கள் காதல் பிடிக்கலையாம். சிம்பு தன்னோட புது காதல் அத்யாயத்தை தொடங்கிட்டாரு என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
காதலிப்பது ஒன்றும் தப்பான விஷயம் இல்லை, ஆனால் ஒவ்வொரு பெண்ணாக காதலிப்பதாக சொல்லி, பாவம் நம்பி வந்த பெண்ணை நன்றாக அனுபவித்து விட்டு, பின் ஏதாவது ஒரு காரணம் சொல்லி விலகிவிடுவது தான் மகா கேவலம். அதைவிட அய்யோக்கியத்தனமான விஷயம் அந்தரங்கமாக சில படங்களை எடுத்து அதை பகிரங்கமாக வெளியிடுவது. இம்முறை அது போன்ற தவறை சிம்பு செய்யக்கூடாது .