Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் வேட்டியை மடிச்சுக்கட்டுகிறார் முருங்கைக்காய் இயக்குனர் பாக்யராஜ்!

05 டிச, 2012 - 13:55 IST
எழுத்தின் அளவு:

திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் இயக்குனர் கே. பாக்யராஜ். இன்றைக்கும் சினிமாவுக்கு வரும் ஒவ்வொரு இயக்குனருக்குமே பாக்யராஜ் மாதிரி ஸ்கிரிப்ட் பண்ண வேண்டும என்பதுதான் நோக்கமாக இருக்கும். அந்த அளவுக்கு பலரை பாதித்தவர் அவர். சுவரில்லாத சித்திரங்கள், மவுனகீதங்கள், அந்த ஏழு நாட்கள், ஒரு கை ஓசை, தூறல் நின்னு போச்சு, இன்று போய் நாளை வா, முந்தானை முடிச்சு. டார்லிங் டார்லிங் டார்லிங், தாவணிக்கனவுகள், இது நம்ம ஆளு என்று வரிசையாக 9 சில்வர் ஜூப்ளி படங்களை கொடுத்தவர் பாக்யராஜ்.

அப்படிப்பட்டவரை வேட்டியை மடிச்சுக்கட்டு படம் சறுக்கி விடவே, அவரது வெற்றிப் பயணத்தில் ஒரு சிறிய தடங்கலாக அமைந்தது. இருப்பினும் அதன்பிறகு சொங்கத்தங்கம், பாரிஜாதம் படங்களை இயக்கிய அவர், கடைசியாக தனது மகன் சாந்தனுவை வைத்து இயக்கிய சித்து ப்ளஸ்டூ என்ற படத்தை இயக்கி ரொம்பவே தடுமாறிப்போனார். அதோடு அவரது நல்ல பெயருக்கும் அப்படம் களங்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சில வருட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் வெற்றிப்படங்களை கொடுப்பேன் என்று வேட்டியை மடிச்சுக்கட்டிக்கொண்டு நிற்கிறார் பாக்யராஜ். அப்படி இவர் இயக்கும் படத்தில் அவரது மகன் சாந்தனு நாயகன் இல்லையாம். பருத்தி வீரன் கார்த்திதான் நாயகனாம். என்னதான் இன்றைய பாணி கதைகளாக படமாக்கும் எண்ணமே இருந்தாலும், அவரது முருங்கைக்காய் டச்சையும் இந்த காலத்திற்கேற்ப ஆங்காங்கே இடம்பெறச்செய்து இன்றைய இளவட்ட ரசிகர்களையும் கிளுகிளுப்பேற்றப்போகிறாராம் பாக்யராஜ்.

Advertisement
சினேகாவின் தாலி எங்கே...?!சினேகாவின் தாலி எங்கே...?! விளம்பரம் மூலம் ஹீரோ ஆகிறார் ஜெமினி பேரன்! விளம்பரம் மூலம் ஹீரோ ஆகிறார் ஜெமினி ...


வாசகர் கருத்து (4)

குருவம்மா - Kurinjipaadi,கஜகஸ்தான்
07 டிச, 2012 - 21:38 Report Abuse
 குருவம்மா இனி முருங்கக்காயி எடுபடாது பயபுள்ள, பேசாம புடலங்காய எடுத்து விடு, அது சும்மா டண்டனக்க டனக்குனக்கா டான்சு ஆடும்.
Rate this:
மணி palangantham - Madurai,இந்தியா
07 டிச, 2012 - 10:54 Report Abuse
 மணி palangantham உன் vayamodu
Rate this:
siva - Chennai  ( Posted via: Dinamalar Android App )
06 டிச, 2012 - 10:19 Report Abuse
siva நி எதையும் மடிச்சி கட்டவேன்டா சும்மா இருந்தா போதும்
Rate this:
முனியம்மா - Muringaa Indica,மாசிடோனியா
05 டிச, 2012 - 22:19 Report Abuse
 முனியம்மா ஏய் உன் முருங்கக்காயை எடுத்து வெளியுல விடுப்பா படம் பிசுகிட்டு ஓடும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Karuppan
  • கருப்பன்
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : தன்யா ரவிச்சந்திரன்
  • இயக்குனர் :பன்னீர்செல்வம்
  Tamil New Film Theeran Adhigaram Ondru
  Tamil New Film Nadodi Kanavu
  • நாடோடி கனவு
  • நடிகர் : மகேந்திரன்
  • நடிகை : சுப்ரஜா
  • இயக்குனர் :வீரசெல்வா
  Tamil New Film Mersal
  • மெர்சல்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :அட்லீ

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in