கடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |
ஆர்யாவுக்கான கதையில் நான் நடித்தது பற்றி ஆர்யா ஒன்றும் கேட்க மாட்டான். ஏன் என்றால் அவன் மானஸ்தன் என்று கூறியுள்ளார் நடிகர் விஷால். வெடி படத்திற்கு நடிகர் விஷால் நடித்துள்ள படம் சமர். திரு இயக்கியுள்ள இப்படத்தில் விஷால் ஜோடியாக த்ரிஷாவும், சுனைனாவும் நடித்துள்ளனர். மலையேறும் பயிற்சி தருபவராக இருக்கும் சக்தி என்ற விஷால் ஒரு விஷயமாக பாங்காக் செல்ல அங்கு அவருக்கு ஏற்படும் பிரச்னைகள் தான் படத்தின் கதை. முதன்முறையாக விஷால் இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் படமாக சமர் உருவாகியுள்ளது. படத்தின் பெரும்பகுதி பாங்காக்கில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் பேசிய விஷால், சமர் படத்தின் கதையை ஆர்யாவுக்குத்தான் டைரக்டர் திரு உருவாக்கினார். ஆனால் கதை பிடித்து போனதால் நானே நடித்து விட்டேன். அவனுக்காக உருவாக்கிய கதையில் நான் நடித்ததால் அவன் நிச்சயம் கோபப்பட மாட்டான். அதைப்பற்றி ஒரு கேள்வி கூட கேட்கமாட்டான். ஏன் என்றால் அவன் மானஸ்தன். அவன் இவன் உள்ளிட்ட படங்கள் முதற்கொண்டு என்னுடைய வளர்ச்சியில் ஆர்யாவின் பங்கு முக்கியமாக இருக்கிறது என்று பேசினார்.