ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வருகிற 12ந் தேதி சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள். அன்று அவர் நடித்த சிவாஜி படத்தின் 3டி வெர்ஷன் வெளிவருகிறது. இதனையே தனது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக ரஜினி அறிவித்துள்ளார். சிவாஜி 3டி படத்தின் அறிமுகவிழா நடந்தது. இதில் ரஜினியின் வீடியோ பேச்ச திரையிடப்பட்டது அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் வெளியூரில் இருப்பதால் இந்த நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. சிவாஜி படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு, பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது. இப்போது அந்தப் படத்தை நவீன 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடுகிறார்கள். நானும் அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். எனது படத்தையே ஒரு ரசிகனாக மாறி கைதட்டி ரசித்தேன். இதை 3டி ஆக்கும் செலவில் 2 புதிய படங்களை தயாரிக்கலாம். ஆனாலும் ஏவிஎம் நிறுவனம் சிவாஜி படத்தை 100 மடங்கு பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். எனது ரசிகர்களுக்கு அவர் வழங்கியிருக்கும் பிறந்த நாள் பரிசாக இதை நான் கருதுகிறேன். சிவாஜி 3டியும் வெற்றி பெற்று சரித்திரம் படைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.