Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பீஸ்ட்: உலகம் முழுக்க பிரபலமான டைட்டில்

22 ஜூன், 2021 - 10:54 IST
எழுத்தின் அளவு:
Beast-movie-titles-in-world-cinema

விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு பீஸ்ட் என்ற டைட்டில் கொடுக்கப்பட்டு நேற்று அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவந்தது. இதனை நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார், பூஜா ஹெக்டே ஹீரோயின். அனிருத் இசை அமைக்கிறார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்த உடனேயே இரண்டாவது லுக்கும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பீஸ்ட் என்ற தலைப்பில் பல மொழிகளில் படங்கள் தயாராகி உள்ளன. அவைகள் அனைத்தும் பெரும்பாலும க்ரைம் த்ரில்லர் மற்றும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை படங்கள்.

பீஸ்ட் என்றால் மிருகத்தனமானவன், மிருக குணம் என்ற பொருள் இருப்பதால் சைக்கோ த்ரில்லர், க்ரைம் த்ரில்லர் வகை படங்களுக்கு இந்த டைட்டில் வைப்பது எல்லா மொழியிலும் நடக்கிற விஷயம்.

கடந்த ஆண்டு இத்தாலியன் மொழியில் தி பீஸ்ட் என்ற படம் வெளிவந்தது. இதனை லூடுவிகோ டி மார்ட்டினோ இயக்கி இருந்தார். பெப்ரின்சோ, லினோ மவுசெல்லா நடித்திருந்தார்கள். வார்னர் பிரதர்ஸ் தயாரித்திருந்தது. இது ஆக்ஷன் த்ரில்லர் வகை படம்.

2017ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரான படம் பீஸ்ட். இதனை மைக்கேல் பெர்சே இயக்கி இருந்தார், ஜெசி பக்லி, ஜானி பிளைன் நடித்திருந்தார்கள். அகிலே பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இது பிசியாஜிக்கல் த்ரில்லர் வகை படம்.

இதுதவிர 2019ம் ஆண்டு தி பீஸ்ட் என்ற பெயரில் ஒரு கொரியன் படம் வெளிவந்தது. இதனை லீ ஜங் ஹோ இயக்கி இருந்தார். லீ சங் மின், யோ ஜீ மயங் நடித்திருந்தார்கள். நீயூ ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருந்தது. இது க்ரைம் த்ரில்லர் வகை படம். 2004ம் ஆண்டு வெளிவந்த 36 குயய் டெஸ் ஆர்பவெர்ஸ் என்ற பிரஞ்சு படத்தின் ரீமேக்.

இவைகள் சில உதாரணங்கள் மட்டுமே இன்னும் நிறைய படங்கள் இருக்கிறது. டைட்டில் மட்டும் தான் காப்பியா, கதையும் காப்பியா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பீஸ்ட் மற்றுமொரு போஸ்டர் வெளியீடு - ரசிகர்கள் கொண்டாட்டம்பீஸ்ட் மற்றுமொரு போஸ்டர் வெளியீடு - ... ‛பீஸ்ட்' சத்தம் கேட்குது.... டுவிட்டர் எல்லாம் தெறிக்குது... :  விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்! ‛பீஸ்ட்' சத்தம் கேட்குது.... ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nsathasivan - chennai,இந்தியா
22 ஜூன், 2021 - 12:27 Report Abuse
nsathasivan கொரானாவால் ஊரடங்கு இருந்த போது டாஸ்மாக் மற்றும் இந்த சினிமா கூத்தாடிகளின் அலப்பறை இல்லாமல் மக்கள் நிம்மதியாக இருந்தார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in