ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு பின், தமிழிலும் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த நடிகையாகி விட்டார், காஜல் அகர்வால். அதனால் தெலுங்கில் முன்னணி இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருவது போல், தமிழிலும் முன்னணி நடிகையாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அடுத்து, கார்த்தியுடன், "ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் நடிக்கவிருக்கும் காஜல், அடுத்தடுத்து விஜய், அஜீத் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்காகவும் பேசி வருகிறார். இந்த நிலையில் தன் உடம்பை பேணி பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ள அவர், யூனிட் உணவுகள் எதையுமே எடுத்துக் கொள்ளாமல் தனக்கென்றே ஒரு பிரத்யேக சமையல் நிபுணரை நியமித்துள்ளார். உடலை மினுமினுப்பாக வைத்திருக்க, பழங்கள், பச்சை காய்கறிகளான உணவுகளை மட்டுமே எடுத்து வருகிறார், காஜல்.