Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை : நயன்தாரா பட நடிகை கண்ணீர்

04 ஜூன், 2021 - 16:51 IST
எழுத்தின் அளவு:
Remya-Suresh-breaks-down-over-morphed-video

மலையாள படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் ரெம்யா சுரேஷ். கடைசியாக சமீபத்தில் வெளியான நயன்தாரா நடித்த நிழல் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாக பரவும் ஆபாச வீடியோ ஒன்றில் ரெம்யா சுரேஷ் காணப்படுகிறார். இது மலையாள சினிமா உலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ள ரெம்யா சுரேஷ். அந்த வீடியோவில் இருப்பது நான் அல்லை. அச்சு அசலாக என்னைப் போலவே இருக்கும் பெண் என்று அந்த வீடியோவில் கதறி அழுகிறார். அவர் அந்த வீடியோவில் பேசி இருப்பதாவது:

இன்டர்நெட்டில் வலம் வரும் வீடியோ குறித்து தோழி தெரிவித்த பிறகே எனக்கு தெரிய வந்தது. அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. ஆனால் அந்த பெண் என்னை போன்றே இருக்கிறார். என்னை நன்கு தெரிந்தவர்களுக்கு அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்பது தெரியும். ஆனால் மற்றவர்களுக்கு வித்தியாசம் தெரியாது என்பது தான் என் பயமே.

அந்த வீடியோ தொடர்பாக நான் ஆலப்புழா காவல் நிலைய சைபர் பிரிவில் புகார் அளித்திருக்கிறேன். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்பது எனக்கு தெரியும். அது என் கணவருக்கும் தெரியும். போலீஸ் அதிகாரிகளும் ஆதரவாக இருக்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்துள்ளனர். அந்த வீடியோவை ஷேர் செய்த நபரின் விபரங்களை சேகரித்திருக்கிறார்கள்.

காவல் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய போது தைரியமாகவும், நம்பிக்கையாகவும் இருந்தது. ஆனால் என் பேஸ்புக் பக்கத்தில் நிறைய மெசேஜ் வந்து கொண்டிருக்கிறது. அந்த வீடியோவை பார்த்த பிறகு என் தோழிகள் போன் செய்தால் என்ன சொல்வது என்று பயமாக இருக்கிறது. ஏனென்றால் திடீர் என்று பார்த்தால் அந்த பெண் அப்படியே என்னை போன்றே இருக்கிறார்.

நான் எந்த சமரசமும் பண்ணாமல் தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். அதனால் தயவு செய்து என்னை தவறாக நினைத்து, அந்த வீடியோவில் இருப்பது நான் என்று கருதி மெசேஜ் அனுப்ப வேண்டாம். இவ்வாறு அந்த வீடியோவில் கண்ணீர் மல்க பேசி இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிசாசு படத்தில் கவுரவ தோற்றத்தில் விஜய்சேதுபதிபிசாசு படத்தில் கவுரவ தோற்றத்தில் ... டப்பிங் பேசினால் தான் முழுமையான நடிகை : ஐஸ்வர்ய லட்சுமி சொல்கிறார் டப்பிங் பேசினால் தான் முழுமையான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ram Ram - கொங்கு நாடு,இந்தியா
08 ஜூன், 2021 - 23:30 Report Abuse
Ram Ram ஸ்வாதி என்னும் அழகான தெலுகு நடிகையின் பெயரை இப்படித்தான் கெடுத்தார்கள் . அவர் சாயலில் இருப்பவரை வைத்து வெளியான படம் போலியானது என்று பின்னர் நிரூபணமானது .
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
06 ஜூன், 2021 - 17:04 Report Abuse
Bye Pass பொதுவாக க்ளோசப்புக்கு மெயின் நடிகைகளையும் மத்த விஷயங்களுக்கு டூப்ளிகேட் பயன் படுத்துவதும் சினிமா துறையில் சகஜம் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in