Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலமெல்லாம் நீங்கள் மட்டுமே “இசைஞானி” : இளம் இசையமைப்பாளர்கள் வாழ்த்து

02 ஜூன், 2021 - 17:02 IST
எழுத்தின் அளவு:
Young-Music-directors-wishes-to-Ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இளையராஜாவின் தீவிர ரசிகர்களான சில இசையமைப்பாளர்கள் அவருக்கு தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

இமான்
கிங், மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். அதிகப்படியான மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் உங்கள் வாழ்க்கையில் அமைய தீவிர ரசிகரான எனது வாழ்த்துகள் சார்.

தேவி ஸ்ரீ பிரசாத்
மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சாருக்கு. இசைக்கு என்னுடைய இசை பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களது அதி அற்புதமான, ஈடில்லாத, இதற்கு முன் கண்டிராத உங்கள் இசையால் எங்களது வாழ்க்கையை இனிமையாக்கியதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. மிகவும் அன்பானவருக்கு எனது அன்புகள் சார். உங்களுக்கு எப்போதும் சிறந்த உடல்நலனும், மகிழ்ச்சியும் அமைய வாழ்த்துகள்.

ஷான் ரோல்டன்
இசை அவர், இசை இவர் என்று கோடி நபர்கள் வரலாம். ஆனால், காலமெல்லாம் “இசைஞானி” என நீங்கள் மட்டுமே அறியப்படுவீர்கள். இசை சித்தருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று, தங்கள் இசைக்கு தாங்கள் தான் சொந்தக்காரர்களா என்று இசையமைப்பாளர்களைக் கேட்டால் பதில் வராது. ஆனால், ஒவ்வொரு ஸ்வர அசைவையும் கணிணியின் உதவியும் இல்லாமல், பேனாவால் பேப்பரில் அடக்கி, தியானத்தில் கண்ட ஆன்மாவின் இசையை அனைவரும் அனுபவிக்கச்செய்த மகானே. வாழ்க பல்லாண்டு!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜாவுக்கு கமல், சித்ரா வாழ்த்துஇளையராஜாவுக்கு கமல், சித்ரா வாழ்த்து தெலுங்கில் படப்பிடிப்புகளை ஆரம்பிக்க ஆயத்தம் தெலுங்கில் படப்பிடிப்புகளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

03 ஜூன், 2021 - 08:15 Report Abuse
சாம் டப்பா இசை இமான் வயது 40 கிட்ட இருக்கும் ... அவன் எப்படி இளம் இசை அமைப்பாளர்????....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in