Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமாவில் எப்போதும் இருக்க ஆசைப் படுகிறேன்; சினேகா!

30 நவ, 2012 - 12:50 IST
எழுத்தின் அளவு:

விரும்புகிறேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி புன்னகை இளவரசியாக  ரசிகர்களின் இதயம் கவர்ந்தவர் நடிகை சினேகா, சமீபத்தில் அவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார், அவர் பொன்னர் சங்கர் படத்திற்கு பிறகு, அவர் நடிப்பில் வெளி வர உள்ள படம் ஹரிதாஸ், இந்த படம் குறித்தும் தினமலருக்கு சினேகா அளித்த பேட்டியில்,

நான் சினிமாவில் கிட்டத்தட்ட 69 படங்களில் நடித்துள்ளேன் , ஆனால் ஹரிதாஸ் படம் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம், என் படங்களில் எப்போதும் கிளாமர் இருக்காது, ரொம்ப எதார்த்தமான குடும்ப பாங்கான படங்கள் தான் நடித்துள்ளேன், அந்த வகையில் என் கேரக்டருக்கு பொருத்தமான ரொம்ப எதார்த்தமான படம் ஹரிதாஸ், படத்தில் டீச்சர் ரோல், அந்த சிறு வயது குழந்தையுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம், இந்த படத்தில் நான் ஹீரோயின் அல்ல, கதை தான் எல்லாமே. நான் எப்போதும் என் படங்களுக்கு ஹோம் வொர்க் செய்து பார்க்கும் பழக்கம் இல்லை, இயக்குனர் ஸ்பாட்டில் என்ன சொல்கிறாரோ அதை புரிந்து கொண்டு அப்படியே  வெளிப்படுத்துவேன், ஒன்னும் மைண்ட்ல வச்சிக்காம டைரக்டர் சொல்றதை கேட்டு செய்தாலே போதும்னு நினைப்பேன் , அதுவே நாம் நினைப்பதை  அழகாக வெளிக்காட்ட முடியும், இந்த படமும் அப்படி தான் நடித்துள்ளேன்.

நான் நடித்த எத்தனையோ படங்களில் சில படங்கள் மனசை விட்டு அகலாது, விரும்புகிறேன், ஆட்டோகிராப், வசூல்ராஜா, பிரிவோம் சந்திப்போம், பார்த்திபன் கனவு, இப்படி எனக்கு பிடித்த படங்களின் வரிசையில் ஹரிதாஸ் படம் நிச்சயமாக இருக்கும். பொதுவா சினிமா ஹீரோயின்கள் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கனா அவங்க திரும்ப நடிக்க கூடாதுன்னு  முடிவு பண்ணிட்றாங்க. அண்ணி அக்கா இது மாறி ரோல்ஸ் பண்ண வச்சிடறாங்க, என்னை பொறுத்த வரை எந்த கதா பாத்திரம் சினேகா நடித்தா நல்லா
இருக்கும்னு டைரக்டர்  முடிவு  பண்ணி  கேட்கிறார்களோ நிச்சயம் அந்த ரோலை நான் மிஸ் பண்ண மாட்டேன்,

கல்யாணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 4 கதை கேட்டிருக்கிறேன் அதில் ஒன்று மட்டும் ஒத்துகிட்டேன், எனக்கு ஸ்க்ரிப்ட் தான்  முக்கியம் , அதன் பிறகு தான் மற்றவை, நான் இது வரை செய்த படங்கள் எனக்கு கெட்ட பெயரை தந்ததில்லை, இனிமேலும் அதை காப்பாற்றுவேன், மீடியாக்களில் நானும் பிரசன்னாவும் நிறைய பேசிட்டோம், அதனால் தான் இந்த தீபாவளிக்கு கூட யாருக்கும்  பேட்டி ,பார்ட்டி என்று எதிலும் கலந்து கொள்ளாமல்  தவிர்த்து விட்டோம் ,அப்பா அம்மா அக்கா அண்ணன் என்று கிட்டத்தட்ட 25 பேர் உள்ள எங்கள் குடும்பத்துடன் இந்த தீபாவளியை மகிழ்ச்சியோடு நானும் பிரசன்னாவும் கொண்டாடினோம் , தற்போது பிரசன்னா சென்னையில் ஒரு நாள் மற்றும் பிரியாணி படத்திலும் ஒரு தெலுகு படத்திலும் நடித்து வருகிறார்

என் எதிர் காலத்தை பற்றி நிறைய கனவு இருக்கு, நிறைய திட்டம் இருக்கு, எனக்கு காஸ்ட்யூம் டிசைன் ஆர்வம் இருக்கு, இன்டிரியர் வேலையும் ஆர்வம் உண்டு, நிச்சயம் விரைவில் சினிமாவில் இருந்து கொண்டு அதன் தொடர்பான சில வேளைகளில் ஈடுபட விரும்புகிறேன்,  விரைவில் அறிவிப்பேன். படம் எனக்கு வந்தாலும்  வரலைனாலும்  யாரையும் போய் வற்புறுத்த மாட்டேன், எனக்கு வரும் ரோல் நிச்சயம் எனக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கு, என்ன இருந்தாலும் நான் எப்போதும் சினிமாவில் இருக்கவே ஆசைப் படுறேன் என்று சொல்லி முடித்தார் சினேகா. 

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

பிரசன்னா - pattal puthi varum nagar,இந்தியா
02 டிச, 2012 - 14:23 Report Abuse
 பிரசன்னா அப்ப நீ கண்ணாலம் கட்டாம இருந்திருக்கோனும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in