Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு மலேஷியா டூ அம்னீஷியா மாற்று மருந்தாக இருக்கும் - கருணாகரன்

30 மே, 2021 - 13:54 IST
எழுத்தின் அளவு:
Karunakaran-about-Malaysia-to-Amnesia

ராதா மோகன் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் நடித்து ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள படம் மலேஷியா டூ அம்னீஷியா. இப்படத்தில் நடித்த கருணாகரன் நடிப்பிற்கு பரவலாக பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

இதுப்பற்றி அவர் கூறுகையில், "இயக்குனர் ராதா மோகன் சாருடன் பணியாற்றுவது எப்போதும் ஒரு உன்னதமான அனுபவம். உப்பு கருவாடு படத்தில் என்னை நாயகனாக அறிமுகப்படுத்திய அவருக்கு நான் என்றென்றும் கடமை பட்டு இருக்கிறேன். குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து மகிழக் கூடிய ஜனரஞ்சகமான படைப்புகள் தருவதில் அவருக்கு நிகர் அவரே. மலேசியா to அம்னீஷியா படத்தில் கூட அவரது கைவண்ணம் நிரவி இருக்கும். மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு இந்த படம் ஒரு பெரிய மாற்று மருந்தாக இருக்கும்.

இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க பட்டு உள்ள அற்புதமான படமாகும். வைபவ், வாணி போஜன், எம்.எஸ் பாஸ்கர் சார், மயில் சாமி சார், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய இந்த அனுபவம் மறக்க முடியாதது" என்கிறார் கருணாகரன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பெரும் செலவில் விஜய் படம் - வம்சி பைடிபள்ளிபெரும் செலவில் விஜய் படம் - வம்சி ... அல்லு சிரிஷின் பிரேம கதன்டா - இரண்டு பர்ஸ்ட் லுக் வெளியீடு அல்லு சிரிஷின் பிரேம கதன்டா - இரண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nachi - ,
30 மே, 2021 - 14:55 Report Abuse
Nachi  இன்று தான் பார்த்தேன் 100% நல்ல. நகைச்சுவையான படம் 😊😊
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in