Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கினார் அமிதாப்

29 மே, 2021 - 12:47 IST
எழுத்தின் அளவு:
Amithabh-bachchan-bought-luxury-apartment-worth-of-Rs.31-crore

பாலிவுட் பிக் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மும்பையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். மனைவி, மகன், மருமகள் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அமிதாப்பச்சன் மும்பை அந்தேரி பகுதியில் கட்டப்பட்டுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் 27 மற்றும் 28 வது மாடிகளை இணைக்கும் வகையிலான ஒரு டபுள் வீட்டை வாங்கி உள்ளார்.

தமிழ் சினிமா நடிகர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் வீடு வாங்குவது பெருமைக்குரிய விஷயமாக மாறி இருப்பது மாதிரி இந்த குடியிருப்பில் வீடு வாங்குவது பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பெருமைக்குரிய விஷயமாக மாறி உள்ளது. நடிகை சன்னி லியோன், இயக்குனர் ஆனந்த் எல்.ராய், ஆலியா பட், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பலர் இங்கு வீடு வாங்கி உள்ளனர்.

அமிதாப் பச்சன் வாங்கி உள்ள வீட்டின் மதிப்பு 31 கோடி ரூபாய். 5500 சதுர அடிகளை கொண்ட இந்த வீட்டுக்கு 6 கார் பார்க்கிங் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பத்திர பதிவு கட்டணமாக மட்டும் 62 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார் அமிதாப் பச்சன். கொரோனா தொற்று காலத்தில் வீட்டில் உள்ளவர்கள யாராவது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது வந்தால் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இந்த வீட்டை அமிதாப் பச்சன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சஞ்சய் தத்துக்கு கோல்டன் விசா: துபாய் அரசு வழங்கியதுசஞ்சய் தத்துக்கு கோல்டன் விசா: ... தடுப்பூசி விழிப்புணர்வு தொடர் தயாரிக்கும் ஆலியா பட் தடுப்பூசி விழிப்புணர்வு தொடர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

30 மே, 2021 - 09:25 Report Abuse
Raghasrin பல விளம்பரங்களின் மூலம் ஈட்டிய காசு. எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம்! !!
Rate this:
Manian - Chennai,ஈரான்
30 மே, 2021 - 08:50 Report Abuse
Manian இதில் பொறாமை பட என்ன இருக்கிறது? அவர் சம்பாதித்த காசிலேதானே வாங்கினார் பொருளாதாரத்தை வளர்த்தார் கட்டுமர தில்லாங்கடிகள் இல்லையே இதே காசை தூபாயிலே முதலீடு செய்யவில்லையே ஏன் பொறாமை படவேண்டும்?
Rate this:
s t rajan - chennai,இந்தியா
29 மே, 2021 - 14:23 Report Abuse
s t rajan பாயசத்திற்கு சக்கரை போதாது எனும் கூட்டம். கஞ்சிக்கு உப்பு தேடி அலையும், ஏன் கஞ்சியே கிடைக்காம அலையும் மக்களின் நடுவே
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
30 மே, 2021 - 18:56Report Abuse
Shekarஎன்ன இருந்தாலும் நம்ம ரெட் லோட்டஸ் வீடு மாதிரி வருமா, கேவலம் 5500 அடிதானாம், அதுவும் அப்பார்ட்மெண்ட்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in