Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் 'என்ட்ரி' கொடுக்கப் போகும் கவுண்டமணி

25 மே, 2021 - 11:16 IST
எழுத்தின் அளவு:
Goundamani-will-back-soon

தமிழ் சினிமாவில் இன்றைய நகைச்சுவை நடிகர்களின் முன்னோடி என்று சொன்னால் அது கவுண்டமணி மட்டுமே. 80, 90, 2கே காலங்களில் அவருடைய நகைச்சுவை என்றாலே தனி சுவாரசியம் தான்.

யாருடன் சேர்ந்து நடித்தாலும் அவரைப் பற்றி அதிகம் பேச வைத்துவிடுவார். அவருடைய கிண்டல், கேலி, கமெண்ட் நகைச்சுவையைத்தான் அவருக்குப் பின் பல நகைச்சுவை நடிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள்.

இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் கவுண்டமணி. அவருடன் தொலைபேசியில் பேசியதைப் பற்றி இயக்குனர் சுப்பிரமணிய சிவா அவருடைய பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில்,

நகைச்சுவை மாமன்னன் அண்ணன் கவுண்டமணி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அண்ணனிடம் போனில் பேசினேன் 3 விஷயம் சொன்னார்.

1) சிவா உடனே கொரானா தடுப்பூசி போட்டுக்க.. நான் போட்டுகிட்டேன் என்றார். என் அம்மாவிடம் போனை கொடுத்தேன், அம்மா நீங்களும் சிவாவும் உடனே தடுப்பூசி போட்டுக்குங்கனு சொன்னார்.

2) தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.

3) எனக்கும் முக்கியம் தரக்கூடிய நல்ல கதை வந்தால் உடனே நடிக்க ஒத்துகுவேன்பா.

அதே கம்பீரம் அண்ணனின் குரலில், விரைவில் அண்ணனை மிக பெரிய நட்சத்திரத்துடன் திரையில் சந்திக்க போகிறோம்..

இறைவனின் திருவருளோடு பல்லாண்டு பல்லாண்டு நலமோடு வாழ்க..” என பதிவிட்டுள்ளார் சிவா.

கவுண்டமணி அடுத்து நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் எனத் தெரிகிறது. சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு படத்தின் இரண்டாவது பாகத்தில் அவர் ரீ-என்ட்ரி கொடுக்கலாம் எனச் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கு கொரோனா நெகட்டிவ் - ஜுனியர் என்டிஆர் மகிழ்ச்சிஎனக்கு கொரோனா நெகட்டிவ் - ஜுனியர் ... குஷ்பு, ஊர்மிளா சிறு வயது தோழிகளா ? குஷ்பு, ஊர்மிளா சிறு வயது தோழிகளா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Sathish - Coimbatore ,இந்தியா
26 மே, 2021 - 09:51 Report Abuse
Sathish ரஜினியே இன்னமும் கதாநாயகனாக நடிக்கும்போது கவுண்டமணி நடிக்க ஆசைப்படுவது நல்ல விஷயம் தான்.
Rate this:
 அருணாசலம், சென்னை. கவுண்டமணி அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த சுப்பிரமணிய சிவா ராசியில்லாத ராஜா.
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
25 மே, 2021 - 22:06 Report Abuse
Ram கௌண்டன் கௌண்டன் தான்
Rate this:
அ.வேல்முருகன் - Salem,இந்தியா
25 மே, 2021 - 18:28 Report Abuse
அ.வேல்முருகன் காலம் கடந்தும் நிற்கும் பழைய படங்களில் கவுண்டமணி பேசி, நடித்த வசனங்கள், காட்சிகள் அது போன்ற சிறப்பான நகைச்சுவை காட்சிகள் அதிகம் இடம் பெறும் வகையில் காட்சிகள் அமைத்து படம் வெளியானால் வெற்றி படமாக அமையும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in