Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓய்வை அறிவித்த நடிகர் சந்திரமோகன்

24 மே, 2021 - 11:25 IST
எழுத்தின் அளவு:
Telugu-senior-actor-Chandramohan-quits-cinema

தெலுங்குத் திரையுலகத்தின் மூத்த நடிகராக சந்திரமோகன் திரையுலகத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று தன்னுடைய 81வது பிறந்தநாளைக் கொண்டாடிய சந்திரமோகன் பத்திரிகையாளர்களிடம் தனது ஓய்வு முடிவு பற்றி தெரிவித்துள்ளார்.

1966ம் ஆண்டு வெளிவந்த 'ரங்குல ராட்டினா' படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரமோகன். அதன்பின் கடந்த 55 வருடங்களாக எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தென்னிந்திய மொழிகளில் இதுவரையிலும் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1975ல் வெளிவந்த 'நாளை நமதே' படத்தில் எம்ஜிஆர் தம்பியாக நடித்தார். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களிலும் நடித்தவர் பின்னர் தெலுங்கில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினார்.

கடைசியாக 2017ல் வெளிவந்த 'ஆக்சிஜன்' படத்தில் நடித்தார். நாயகன், நகைச்சுவை, குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் பல நடிகர்கள், நடிகைகளுடன் நடித்திருக்கிறார். தெலுங்குத் திரையுலகத்தில் பல முக்கியமான படங்களை இயக்கிய கே.விஸ்வநாத்தின் உறவினர் தான் சந்திரமோகன். இனி, வீட்டில் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிரம்மாண்ட இயக்குனர்களுக்கு வலை வீசும் ஹீரோக்கள்பிரம்மாண்ட இயக்குனர்களுக்கு வலை ... ஷங்கர் - ராம்சரண் படத்தில் பாலிவுட் நாயகி ஷங்கர் - ராம்சரண் படத்தில் பாலிவுட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Chellah Anand - chennai,இந்தியா
26 மே, 2021 - 09:17 Report Abuse
Chellah Anand சுடரும் சூறாவளியும் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார் .
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25 மே, 2021 - 10:54 Report Abuse
Ramesh R நம்ப ரஜினி ???
Rate this:
lollypop - Seattle,யூ.எஸ்.ஏ
25 மே, 2021 - 07:46 Report Abuse
lollypop நன்றாக ஓய்வெடுங்கள் சார் அன்பு மலர்களே பாடலை மறக்க முடியுமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in