Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் வழங்கிய கொரோனா நிதி ரூ.25 லட்சமா, ரூ.2.5 கோடியா? - குழப்பம் வந்தது ஏன்?

14 மே, 2021 - 11:53 IST
எழுத்தின் அளவு:
Ajith-donates-Rs.25-lakhs-to-CM-relief-fund-for-Corona-fight

கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் குமார் ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார். முன்னதாக அவர் ரூ.2.5 கோடி வழங்கியதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி உள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிக்காக அரசுக்கு தாராளமாக நிதி வழங்கலாம் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து திரையுலகில் சார்பில் முதல் ஆளாக நடிகர் சிவகுமார் குடும்பம் சார்பில் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.1 கோடி நிதியை முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக சென்று வழங்கினர். தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.25 லட்சம் நிதி வழங்கினார்.

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் தன் பங்கிற்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார். இதை அவர் வங்கி பரிவர்த்தனை மூலம் வழங்கி உள்ளார்.

அஜித் வழங்கிய நிதியில் குழப்பம்

முன்னதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் அஜித் ரூ.2.5 கோடி நிதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, வங்கி பரிவர்த்தனை மூலம் அஜித் ரூ..25 லட்சம் கொரோனா நிதி வழங்கியாக தெரிவித்தார். இதனால் அஜித் வழங்கிய நிதி தொடர்பாக சற்று குழப்பம் நிலவியது. பின்னர் அரசு சார்பிலும் திருத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அவர் ரூ.25 லட்சம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
இதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் பூஜா ஹெக்டேஇதுவரை நடிக்காத ஒரு கேரக்டரில் பூஜா ... தமிழில் தாமதமாகும் ஓடிடி ரிலீஸ் படங்கள் : காரணம் என்ன ? தமிழில் தாமதமாகும் ஓடிடி ரிலீஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Gopalan - Coimbatore ,இந்தியா
15 மே, 2021 - 09:40 Report Abuse
Gopalan ஒரு வருடம் கழித்து கண்டுபிடிக்கபட்டதா. கூட்டு குடும்பம் மற்றும் உச்ச நடிகரின் மகளை உயர்த்திக்காட்ட குறைக்கப்பட்டதா
Rate this:
Manian - Chennai,ஈரான்
14 மே, 2021 - 13:38 Report Abuse
Manian இது வழக்கமான கட்டிங் 40% போக மீதிதான்னு எடுத்துகிடனும் .
Rate this:
Krush - Polisai, Chennai,இந்தியா
14 மே, 2021 - 13:07 Report Abuse
Krush இப்போ தெரியுதா, அன்னிக்கு தெரியாம போட்டு வந்த மாஸ்க் கலர்...
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
15 மே, 2021 - 00:36Report Abuse
Ramமாஸ்கொ காபி பிளாசுக்கோ உடுப்பா உடுப்பா...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in