இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
சிட்டி மீடியா நிறுவனம் தயாரிப்பில், புதுமுகங்கள் நடிக்கும் புதிய படத்திற்கு வடு என்று பெயரிட்டுள்ளனர். டைரக்டர் அருள் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் உதயன் இசையமைக்கிறார். முனீஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்கிறார்கள்.
படம் குறித்து டைரக்டர் அருள் அளித்துள்ள பேட்டியில், வடு என்றால் ஒரு காயம் உண்டாகி அதனால் ஏற்படும் தழும்பு என்று அர்த்தம். காயம் மறைந்துவிடும். ஆனால் வடு மறையாது. செய்த தவறை சரிசெய்வது அல்லது பிராயச்சித்தம் தேடுவதுதான் வாழ்க்கையின் உன்னதமான பகுதி என்பதைச் சொல்லும் வகையில் இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சின்ன வயதில் ஒருவன் செய்த தவறு ஒரு பெண்ணை..அவள் படிப்பு ரீதியாக எந்த அளவு பாதிக்கிறது என்பதும், அந்த தவறுக்கு பரிகாரம் தேட அந்த பையன் பின்னர் தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதும்தான் படம், என்றார்.