Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு சினேகா ரொம்ப பிடிக்கும்! பாலு மகேந்திரா

28 நவ, 2012 - 10:34 IST
எழுத்தின் அளவு:

எனக்கு ரொம்ப பிடித்த கதாநாயகி, சினேகா, என்று டைரக்டர் பாலுமகேந்திரா கூறியுள்ளார். சினேகா, கிஷோர் நடித்து, ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கி, டாக்டர் வி.ராம்தாஸ் தயாரித்துள்ள படம், ஹரிதாஸ். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்துகொண்டு டைரக்டர் பாலுமகேந்திரா பேசுகையில், இந்த படம், தந்தை-மகனுக்கு இடையேயான கதை என்று கேள்விப்பட்டேன். ஒரு காலத்தில் தந்தை, மகனுக்கு ஹீரோவாக இருக்கிறான். அப்புறம் தந்தைக்கு மகன் ஹீரோவாக இருக்கிறான். தந்தை-மகன் உறவு, பவித்ரமானது.

என் மூத்த மகன் பாலா. இன்னொரு மகன் வெற்றி மாறன். சீனுராமசாமி, ராம் ஆகியோரும் என் பிள்ளைகள்தான். இவர்கள் எல்லோருமே உலக தரத்தில் படங்களை இயக்குகிறார்கள். இதைவிட ஒரு தகப்பனுக்கு என்ன பெருமை வேண்டும்? எனக்கு ரொம்ப பிடித்த நடிகை, சினேகா. ஏன் என்று என்னால் விளக்கம் சொல்ல முடியாது. கிஷோர் மிக சிறந்த நடிகர். இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ரத்னவேல், என்றார். விழாவில் டைரக்டர்கள் கே.பாக்யராஜ், பாலா, சசி, கண்ணன், நடிகர்கள் விக்ரம், பிரசன்னா, கிஷோர், விஜய் ஆதிராஜ், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, ஒளிப்பதிவாளர் ரத்னவேல், பாடல் ஆசிரியர் பா.விஜய் ஆகியோரும் பேசினார்கள். பட அதிபர் டாக்டர் வி.ராமதாஸ் வரவேற்று பேசினார். டைரக்டர் ஜி.என்.ஆர்.குமரவேலன் நன்றி கூறினார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

தென்றல் - Madukarai,மாடகஸ்கர்
28 நவ, 2012 - 21:56 Report Abuse
 தென்றல் அப்ப மௌனிகா என்ன ஆச்சு. வயசுக்கு ஏத்த யோசனை வேணும் பாலு, எதோ ரெண்டு படம் புடிச்ச உடன் என்னவேணும்னாலும் உளறலாமா, இந்த பிரசன்னா வீட்டுல சப்பாத்தி மாவு பெசஞ்சுகிட்டு இருக்கானா இல்லை அப்பம் சுட்டுகிட்டு இருக்கானா கிறுக்குபய புள்ளைகளா.
Rate this:
குழப்பம் குமாரவேல் - kumarikarai ,இந்தியா
28 நவ, 2012 - 14:58 Report Abuse
 குழப்பம் குமாரவேல் பாலு மகேந்திரா சொல்றார்.எனக்கு மிகவும் பிடித்த நடிகை சினேகா. ஏன் என்று என்னால் விளக்கம் சொல்ல முடியாது. ஆகா என்ன சிறப்பான விளக்கம். இப்போ எனக்கு புரியுது ஏன் சினேகா சிறந்த நடிகை என்று.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in