Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அண்ணாத்த' முடிந்ததும் அமெரிக்கா செல்கிறார் ரஜினி?

05 மே, 2021 - 13:20 IST
எழுத்தின் அளவு:
After-completing-Annatha-Rajini-may-be-fly-to-US

கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனாலும், ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.

இன்னும் சில நாட்களில் படத்தின் படப்பிடிப்பு முடிவடையலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு முடிவடைந்த பின் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வழக்கமான உடல்நலன் செக்கப்பிற்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகச் சொல்கிறார்கள்.

அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவும், மருமகன் தனுஷும் தற்போது அமெரிக்காவில் தான் உள்ளனர். ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் தனது மனைவி, மற்றும் மகன்களுடன் சென்றுள்ளார். ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றால் அவர்களும் அவருக்குத் துணையாக அங்கு இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள், பத்திரிகையாளர்கள், சில தனிப்பட்ட நபர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ரஜினிகாந்த் அமெரிக்க செல்லலாம் என்கிறார்கள்.

ஐதராபாத்திலிருந்து ரஜினிகாந்த் சென்னை வந்ததும் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை சந்திக்கலாம் என்றும் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
‛என்னடி முனியம்மா...' பாடல் புகழ் டி.கே.எஸ்.நடராஜன் மறைவு‛என்னடி முனியம்மா...' பாடல் புகழ் ... நடிக்கும் எண்ணமில்லை : நடிகை ரோஜா மகள் நடிக்கும் எண்ணமில்லை : நடிகை ரோஜா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Rajagopal - Chennai,இந்தியா
07 மே, 2021 - 18:24 Report Abuse
Rajagopal தமிழ் நாட்டை ஆசை காமிச்சு மோசம் பண்ணிட்டீங்க. எங்க வேணாலும் போய் கொண்டாடுங்க. எங்க மூஞ்சில முழிக்காதீங்க. ஒழிஞ்சு போங்க.
Rate this:
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
06 மே, 2021 - 09:05 Report Abuse
Vijayan Singapore Ivar
Rate this:
shyamnats - tirunelveli,இந்தியா
06 மே, 2021 - 07:57 Report Abuse
shyamnats உடம்புக்கு முடியல என்று சொல்லித்தான் அரசியலில் ஈடு பட மாட்டேன் என்றவர் இப்பொழுது படங்களில் துள்ளிக்குதித்து நடித்து மக்களுக்கு சேவை செய்ய கிளம்பிட்டார். இனிமே தமிழ் நாட்டில், அமெரிக்காவில் தேனும் பாலும் ஓடப்போகிறது.
Rate this:
m.arunachalam - trichy,இந்தியா
06 மே, 2021 - 06:13 Report Abuse
m.arunachalam மிக மிக அவசியமான , நாட்டுக்கு தேவையான , மக்கள் வாழ்வை ஒளிர வைக்க உதவும் செய்தி .
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
06 மே, 2021 - 04:52 Report Abuse
Ram அமெரிக்கா வில் tem சரியில்ல போல .. அங்க பொய் கட்சி தொடங்க போறார் ....
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in