Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராணா பூஜை நடந்து 10 ஆண்டுகள் : ரஜினிகாந்த் ஆசை நிறைவேறுமா?

29 ஏப், 2021 - 18:58 IST
எழுத்தின் அளவு:
10-years-of-Rana-pooja:-Will-Rajinikanths-wish-come-true?

தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிகாந்த் - கேஎஸ் ரவிக்குமார் ஜோடி இணைந்த முத்து, படையப்பா ஆகிய இரண்டு படங்களும் அவர்களது திரைப்படப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்த படங்கள். அந்த இரண்டு படங்களையும் மிஞ்சும் வகையில் பத்து வருடங்களுக்கு முன்பு இதே நாளில் பூஜை போடப்பட்ட படம் ராணா. படப்பூஜை நடந்த முடிந்ததும் ரஜினிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு நலமுடன் திரும்பினார்.

அதன்பின் அந்தப் படம் அப்படியே கைவிடப்பட்டது. சமீபத்தில் தன்னுடைய தயாரிப்பில் ஆரம்பமான புதிய படத்தின் பூஜையின் போது ரஜினிகாந்த் மீண்டும் ராணா கதையை முழுவதுமாகக் கேட்டார் என கேஎஸ் ரவிக்குமார் சொன்னார்..




ராணா படம் ஒரு வரலாற்றுப் படம். ஏஆர் ரகுமான் இசையமைக்க, அந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். மிகவும் பிரம்மாண்டமான படமாக உருவாக வேண்டிய படம். பத்து வருடங்களுக்கு முன்பே அப்படம் தயாராகி வெளியாகியிருந்தால் பாகுபலி படத்திற்கு முன்பே ஒரு சரித்திர சாதனையைப் படைத்திருக்கலாம்.

ரஜினிகாந்தும் அரசியல் ஈடுபடும் எண்ணத்தை அறவே விட்டுவிட்டார். எனவே, ராணா படம் மீண்டும் உருவாகாதா என்ற ஏக்கத்தில் ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் மனது வைத்தால் படம் மீண்டும் உருவாகலாம்.

பத்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது தொழில்நுட்பம் நிறையவே மாறிவிட்டது. அதனால், நிச்சயம் ஒரு பிரம்மாண்டப் படைப்பாக இருக்கும். ரசிகர்களின் ஆசையையும் தன்னுடைய ஆசையையும் ராணா மூலம் நிறைவேற்றுவாரா ரஜினிகாந்த்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா தீவிரம் : முக்கிய படப்பிடிப்புகள் நிறுத்தம்கொரோனா தீவிரம் : முக்கிய ... தெலுங்கில் ரீமேக்காகும் 'கர்ணன்' தெலுங்கில் ரீமேக்காகும் 'கர்ணன்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
30 ஏப், 2021 - 20:35 Report Abuse
RaajaRaja Cholan ஒரு சோகமான நிகழ்வு என்னவென்றால் , அந்த முன் வரிசையில் அமர்ந்திருக்கும் பெரும்பாலோர் இப் பூவுலகில் இல்லை . விண்ணுலகம் எய்தி விட்டார்கள்
Rate this:
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
30 ஏப், 2021 - 09:27 Report Abuse
சொல்லின் செல்வன் இன்னும் கொஞ்சநாள் காத்திருந்தால் மீனா பொண்ணு வளர்ந்திடுவாங்க. அவங்கள கதாநாயகியா புக் பண்ணிக்கலாம் தலைவா
Rate this:
234 லட்சியம் 200 தோல்வி நிச்சயம், DMK தோல்விக்கு பாடுபடுவோம், சென்னை. தீபிகா படுகோனேக்கு 10 வயது கூடி விட்டது. எனவே இளைய வயது நடிகையைத் தான் தலைவர் தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் விசில் குஞ்சுகள் (ரசிகர்கள்) சந்தோஷம் அடைவார்கள்.
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
01 மே, 2021 - 11:01Report Abuse
சாண்டில்யன்ஆம் தீபிகாவுக்கு மட்டுமே பத்து வயது கூடி விட்டது சொஊப்பர் ஸ்டார் வயது பத்து குறைந்து விட்டதோ போங்கடா போயி வேற வேலையிருந்தா பாருங்க...
Rate this:
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
29 ஏப், 2021 - 20:44 Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN "ராணா" முன்பு "கோ" போட்டால் "கோராணா"
Rate this:
Aruna Panchatsharam - Detroit,யூ.எஸ்.ஏ
29 ஏப், 2021 - 20:36 Report Abuse
Aruna Panchatsharam இன்னுமா ஆசை விடவில்லை பணம் மீது , தொடர்ந்து ஊத்திக்க போற
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in