Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டை மீறினாரா விஜய்?

26 ஏப், 2021 - 15:17 IST
எழுத்தின் அளவு:
Did-Vijay-breaks-the-Corona-rule?

கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும், திரும்பி வரும் பயணிகளுக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிற்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அப்படி வரும் பயணிகளுக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். முடிவுகள் வரும் வரை பயணிகள் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் விமான நிலையத்திலேயே இருப்பார்கள். கொரோனா தொற்று இருப்பதாக முடிவு வந்தால் அந்தப் பயணி மருத்துவமனையில் சேர்க்கப்படுவார். தொற்று இல்லை என்றால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவர். அதே சமயம், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜார்ஜியா நாட்டில் தனது படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட நடிகர் விஜய் நேற்று சென்னை திரும்பினார். ஆனால், இன்று காலை அவர் மறைந்த நடிகர் விவேக் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வந்த பின் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இன்றே அவர் சென்றது ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, நடிகர் விவேக்கின் அகால மரணத்தால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் இருக்கும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்ததும் மறுநாளே செல்ல வேண்டுமா என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

விவேக் இறந்து பத்து நாட்கள் ஆகியுள்ள நிலையில் விஜய் தரப்பிலிருந்து ஒரு இரங்கல் அறிக்கை கூட வரவில்லை. அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு, அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி ஒரு வாரம் கழித்து கூட அவர் விவேக் வீட்டிற்குச் சென்று ஆறுதல் சொல்லியிருக்கலாமே என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

கொரானோ விதிமுறைகளை பின்பற்றுவதில் சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டுமென பெரும்பாலோர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
ஹாலிவுட் பாணியில் தமிழில் உருவாகும் கிங்காங் படம்ஹாலிவுட் பாணியில் தமிழில் உருவாகும் ... தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம்: சங்க தலைவர் எச்சரிக்கை தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்படும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

madhavan rajan - trichy,இந்தியா
30 ஏப், 2021 - 21:40 Report Abuse
madhavan rajan அரசியல்வியாதிகளும், சினிமா துறையினரும் நமது நாட்டில் சிறப்பு அந்தஸ்து பெற்ற குடிமக்களாவார்கள். அவர்களுக்கு எப்போதுமே சாதாரண மக்களுக்கான சட்டங்கள் பொருந்தாது. உதாரணம் SPB, வசந்த குமார், விவேக் போன்றவர்களின் இறப்புக்குப்பின் நிகழ்ந்தவை. சாதாரண மனிதருக்கு பிணத்தின் முகத்தைக்கூட காட்டமாட்டார்கள். அதுவும் விஜய் போன்றவர்கள் உலகையே திருத்த வந்தவர். அவருக்கு சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்று சொல்லும் துணிவு யாருக்காவது இருக்கிறதா? படங்களில்தான் அவர் சட்டத்தை மதிப்பதுபோல நடிப்பார். அதற்குத்தான் நமது மக்கள் அலைவார்கள்.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28 ஏப், 2021 - 16:20 Report Abuse
J.V. Iyer விஜய் எல்லோருக்கும் மேலே அவர் சட்டத்திற்கு அப்பால. அவருக்கு கரோனா வராது. வந்தால் காலை பிடித்துவிடும்.
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
27 ஏப், 2021 - 17:14 Report Abuse
திரு.திருராம் ஏன் சைக்கிள்ள ஓட்டுபோடப்போனப்ப பின்னாடியே கேமராவ தூக்கிகிட்டு ஓடுனப்ப, நாட்டுல ஆயிரம் பிரச்சனை இல்லியா, இல்ல அன்னக்கி மட்டும் பாலாறும் தேனாறும் ஓடிக்கிட்டிருந்திச்சா?
Rate this:
Krish - Mumbai,இந்தியா
27 ஏப், 2021 - 16:30 Report Abuse
Krish Vijay should be arrested for flouting Covid-19 protocols returned yesterday night from Georgia, as he has to have 7-days Home quarantine and then only after a Covid-19 negative after 7 days, he should move out. Shame on him
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
27 ஏப், 2021 - 16:10 Report Abuse
திரு.திருராம் இவரு ஏன் சுட்லருக்கு நல்ல ஒரு விக்கு வைக்க ஆலோசனை சொல்லக்கூடாது?
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in