Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் விவேக் காலமானார் : சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் அழவைத்து சென்றார்

17 ஏப், 2021 - 06:55 IST
எழுத்தின் அளவு:
Actor-Vivek-no-more

நடிகர் விவேக்கிற்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் உயிர் காக்கும், எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று(ஏப்., 17) காலை 4.35 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகர் விவேக்(59). ‛மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். ரஜினி, கமல் தொடங்கி இப்போதுள்ள நடிகர்கள் வரை 200க்கும் அதிகமான படங்களில் காமெடி நடிகராக நடித்தார். நான் தான் பாலா, வெள்ளைப்பூக்கள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.



சினிமாவில் நடிப்பதுடன் அப்துல் கலாம் மீது கொண்ட பற்றால் மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம் செலுத்தி வந்தார். கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். கொரோனா தடுப்பூசி குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தன் குழுவினருடன், நேற்று முன்தினம், சென்னை, ஓமந்துாரர் அரசு மருத்துவமனையில், கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இந்நிலையில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வீட்டில், விவேக், தன் குடும்பத்தினருடன் நேற்று காலையில் பேசி கொண்டிருந்த போது, லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக வடபழநியில் உள்ள, சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். விவேக்கிற்கு மாரடைப்பபு ஏற்பட்டதால் ரத்த நாள அடைப்பை சரி செய்ய ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. இதய செயல்பாட்டை அதிகரிக்க, இயல்பு நிலைக்கு கொண்டு வர, உயிர் காக்கும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாகத்தான் இருப்பதாக நேற்று டாக்டர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அவர் விரைவில் குணமாக வேண்டும் என அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் சமூகவலைதளங்களில் பிரார்த்தனை செய்து வந்தனர்.



இந்நிலையில் இன்று(ஏப்., 17) காலை 4.35 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. சீக்கிரம் குணமாகி மீண்டும் மக்களை சிரிக்க வைப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அவர் இந்த மண்ணை விட்டு பிரிந்தது தமிழ் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறப்பதற்கு ஒரு நாள் முன்பு கூட கொரோனா தடுப்பூசி போடுங்க என விழிப்புணர்பு ஏற்படுத்தி சென்றவர் இன்று இல்லை என யாராலும் நம்பமுடியவில்லை. காலையில் எழுந்த பலருக்கு இந்த செய்தி நிச்சயம் பெரும் அதிர்ச்சியே. விவேக்கின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தடுப்பூசியால் பாதிப்பில்லை
முன்னதாக நேற்று விவேக் உடல்நிலை குறித்து சிம்ஸ் டாக்டர்கள் விளக்கம் அளித்தபோது தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். அவர் கூறுகையில், ‛‛நடிகர் விவேக் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது மன வேதனை அளிக்கிறது. அவர், தானாக முன்வந்து, கொரோனா தடுப்பூசி குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தடுப்பூசியால், மாரடைப்பு ஏற்படவில்லை. மருத்துவ ரீதியாக, ஒரே நாளில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வால், தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில், 2.17 லட்சம் பேர், தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அவரது உடல்நிலை பாதிப்புக்கும், தடுப்பூசிக்கும் தொடர்பில்லை. தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.



விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விவேக்கின் உடலக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மாலை 4 மணிக்கு மேல் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுக அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பலர் அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றபோது மரக்கன்றுகளை ஏந்தி சென்றனர்.



அரசு மரியாதையுடன் தகனம்
பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்ட விவேக்கின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் 78 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை கொடுக்கப்பட்டது. விவேக்கின் இளைய மகள் தேஜஸ்வினி இறுதிச்சடங்குகளை செய்தார். பின் அவரின் உடல் மின்மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சீக்கிரம் குணமாகி வாங்க விவேக் : திரையுலகினர் பிரார்த்தனைசீக்கிரம் குணமாகி வாங்க விவேக் : ... விவேக்கும்... சினிமாவும்...! - ஓர் பார்வை விவேக்கும்... சினிமாவும்...! - ஓர் பார்வை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

ponssasi - chennai,இந்தியா
24 ஏப், 2021 - 09:53 Report Abuse
ponssasi நல்ல உள்ளம் கொண்டவர் என்பதற்கு அவரின் இறுதிசடங்கெ சாட்சி. நடிகர்களுக்கு விவேக் மரணமும் ஒரு மெசேஜ் சொல்லி சென்றுள்ளார். இவன் உயிர் நண்பன், இவன்தான் தல, இவன்தான் தளபதி இவர்தான் என் ரோல் மடல், இவர்தான் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடிய விவேக், இவர்கள் யாரும் சக நடிகனின் இறப்பில் கலந்துகொள்ளவில்லை, மாறாக இன்டர்நெட் வழியாக இரங்கல் தெரிவித்தார்கள், சிலர் அதுகூட சொல்லவில்லை, அவருக்கு இறுதிவரை வந்தவர்கள் யார் யார் என்பது கூட விவேக்குக்கு தெரியாது. அவர் முக்கியமானவர் இவர் முக்கியமானவர் நான் இல்லையெனில் என் குடும்பத்தில் ஒருவராக இருந்து என் குடும்பத்தை கவனித்து கொள்ளுவார் என்று நினித்தவரெல்லாம் அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட வரவில்லை. நான் பெரிய நடிகன் என்று சொல்லுபவர்களுக்கு உங்களால் சம்பாதித்தவர்களெல்லாம் உங்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூட வரமாட்டார்கள். நீங்கள் எப்படி இன்டர்நெட் வழியாக அஞ்சலி செலுத்தினீர்களோ உங்களுக்கும் அதே நிலைதான். சமூக சேவகன் எனும் அடிப்படியில் விவேக்கிற்கு வந்த கூட்டம் உங்களுக்கு வராது. மக்களுடன் இணைந்து வாழ பழகுங்கள், நீங்கள் ஒன்றும் தேவ தூதர்கள் அல்ல என்பதை உணருங்கள்.
Rate this:
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
17 ஏப், 2021 - 13:00 Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் உங்கள் நகைச்சுவையை கேட்டுட்டு எப்படி இருந்த எங்களை, இப்படி வுட்டுட்டு போய்ட்டிங்களே
Rate this:
Manian - Chennai,ஈரான்
17 ஏப், 2021 - 11:33 Report Abuse
Manian அது சரி இவிங்க ஏன் இதய நோய் இருக்குதான்னு வருஷம் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வதில்லை? அதுபோல பல்லையும் சுத்தம் பண்ணிக்கிடனும் .
Rate this:
S.PALANIVELU - .திருவாரூர் ,இந்தியா
17 ஏப், 2021 - 10:20 Report Abuse
S.PALANIVELU எரிமலை எப்படி பொறுக்கும்... சிந்திக்க வைத்தவன் தொலைந்து போனானே பார்க் 'கலாம்' பழ 'கலாம்' நிலை மாறி கலாமோடு கலந்தவனை தேடுகின்றன மரக்கன்றுகள்..
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
17 ஏப், 2021 - 07:31 Report Abuse
Bhaskaran Samooga akkarai ulla oru nalla kalaingar
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in