Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பரதக் கலைக்கு கமல், அஜித் துரோகம் செய்து விட்டனர் - இயக்குநர் குமுறல்

09 ஏப், 2021 - 13:06 IST
எழுத்தின் அளவு:
Dance-Master-Sai-sriram-slam-Kamal-and-Ajith

முழுக்க முழுக்க பரதக்கலையை மையமாக வைத்து குமார சம்பவம் என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார் பிரபல நடன கலைஞர் சாய் ஸ்ரீராம். இந்தப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், நடனம், தயாரிப்பு, இயக்கம் என்பதோடு மட்டுமில்லாமல் அவரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். படத்தில் அவருடன் நிகிதா மேனன், சாய் அக்ஷிதா, மீனாட்சி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

படம் பற்றி சாய் ஸ்ரீராம் கூறியதாவது: நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டியத்துறையில் இருக்கிறேன். என்னுடைய அப்பா பி.கே.முத்து பரதக்கலைஞராக இருந்தவர். ஏழைபடும்பாடு, சுதர்ஸன், மக்களைப் பெற்ற மகராசி, மாங்கல்யம் போன்ற படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார். சிவாஜிக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்திருக்கிறார். நானும் இதே துறைக்கு வந்து விட்டேன்.

கடந்த பல வருடங்களாகவே சினிமாவில் பரத நாட்டியத்தை மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள். குறிப்பாக ஆண்கள் பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்து விடும் என்ற தவறான ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக வரலாறு படத்தில், நாயகன் அஜித் பரதம் கற்றுக்கொண்டதால் தனக்கு திருமணம் ஆகவில்லை என ஒரு காரணம் சொல்வார்.

அதே போல விஸ்வரூபம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நாட்டியக்கலைஞராக இருப்பதால், குறிப்பாக பெண் தன்மை கொண்டவராக இருப்பதால், அவரது மனைவி அவரை புறக்கணிப்பதாக காட்டப்பட்டிருக்கும். நன்றாக பரதம் தெரிந்த ஜெயம் ரவியே கூட, டண்டணக்கா என்கிற பாடலில் அதை அவமதிக்கும் விதமாகத்தானே ஆடியிருந்தார்.

பரதம் என்பது புனிதமான விஷயம். அதை இப்படியெல்லாம் சிறுமைப்படுத்துவது பற்றி யாருமே கவலைப் படவில்லை. என்னிடம் பரதம் கற்க விரும்புபவர்கள் எல்லாம் கேட்கும் முதல் கேள்வி, இதை கற்றுக்கொண்டால் நமக்கு பெண் தன்மை வந்துவிடுமா, திருமணத்திற்கு பெண் தர மாட்டார்களா என்கிற சந்தேகத்துடனேயே கேட்கிறார்கள்.. அந்தவகையில் இந்த விஷயத்தில் கமலும், அஜித்தும் பரதக்கலைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்றே சொல்வேன்.

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் இதுபற்றிய உண்மையையும் எனது மனக்குமுறலையும் வெளிப்படுத்தியபோது, அது அறியாமல் நடந்துவிட்ட தவறு என பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார். அதேபோல நடிகர் அஜித்தாவது அதுபற்றி தெரியாமல் யாரோ சொல்லிக்கொடுத்ததை செய்தார் என்று வைத்துக்கொள்ளலாம்... ஆனால் கமல் பரதம் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும், ஆண் பரத கலைஞர்களை அவமதித்து விட்டார். அவர் ஜாம்பவான் என்பதற்காக தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியுமா..?

இப்படி ஒவ்வொரு படத்திலும் பரதக்கலையையும் ஆண் பரத கலைஞர்களையும் தவறாக சித்தரிப்பதை இனியேனும் தடுக்க வேண்டும்.. அதேசமயம் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக போய் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதால் தான், தற்போது பரதத்தை மையப்படுத்தி 'குமார சம்பவம்' என்ற படத்தை நானே எடுத்து முடித்திருக்கிறேன்.

இந்தப் படத்திற்குப் பிறகு பரதத்தை இனிமேல் யாரும் தவறாக காட்டக்கூடாது. அதேபோல ஆண்கள் பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்துவிடும் என்கிற பொய்யான கருத்தும் இனி பரவக்கூடாது. ஆண்களும் பரதம் கற்றுக்கொள்ள ஆர்வமாக முன் வரவேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம் . என்றார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் புத்தாண்டில் ஒளிபரப்பாகும் ஜி.வி.பிரகாஷ் படம்தமிழ் புத்தாண்டில் ஒளிபரப்பாகும் ... மாலத்தீவில் நீச்சல் உடையில் ஜான்வி கபூர் செம ஹாட் மாலத்தீவில் நீச்சல் உடையில் ஜான்வி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
15 ஏப், 2021 - 19:39 Report Abuse
Rajagopal பரத நாட்டியத்தில் பெரும் ஆசான்களாக இருந்தவர்கள் ஆண்கள். வழுவூர் ராமையா பிள்ளையின் சீடர்களில் பலர் இன்று பெரும் புகழ் பெற்ற பெண் பரத நாட்டிய கலைஞர்கள்.
Rate this:
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
15 ஏப், 2021 - 12:04 Report Abuse
சொல்லின் செல்வன் போஸ்டரை பார்த்தால் ...போல இருக்கு.
Rate this:
seshadri - chennai,இந்தியா
15 ஏப், 2021 - 10:45 Report Abuse
seshadri The current actors are using all the possible mode to make money and not service or spread of any art including the great Bharatham. In the olden days even though it was done for money but there was a sanctity in the performance. But people like kamal is doing everything only for money including the preaching of christianity. He does not have belief in christianity it is only for money. He will do anything for the sake of money such a cheap artist is kamal.
Rate this:
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
15 ஏப், 2021 - 09:58 Report Abuse
சொல்லின் செல்வன் ரஜினி பொண்ணு ஆடிய ஆட்டத்துத்துக்கு பேர் என்னங்னா அப்புறம் மதுவந்தினு ஒரு அம்மா ஒன்னு பண்ணுச்சு அதை எந்த வகையில சேர்க்கறதுன்னே தெரியல
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
13 ஏப், 2021 - 05:22 Report Abuse
meenakshisundaram அது சரி .கொரில்லா போல நடனமாடும் விஜய் பரதக் கலை க்கு சேவையா செய்துள்ளார் ?
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in