‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஆண்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்று நடிகை லட்சுமி ராய் பட்டியல் போட்டுள்ளார். நடிகை சோனா ஆண்களை டிஷ்யூ பேப்பர் என்று கூறி சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிலையில், ஆண்கள் பற்றி நடிகை லட்சுமிராய் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். அவர் தனது பேட்டியில், நான் இதுவரை சந்தித்த ஆண்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நான் சந்தித்த ஆண்கள் பெரும்பாலும் ரொம்ப நல்லவர்கள்தான். படப்பிடிப்புகளின்போது எனக்கு உதவி செய்த கதாநாயகர்கள் இருக்கிறார்கள். போலி ‘செக் கொடுத்து என்னை ஏமாற்றிய தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். தென் மாநிலங்களில் ரசிகர் மன்றங்கள் வைக்கும் அளவுக்கு நானும் ஒரு பிரபல நடிகையாக இருப்பதில் சந்தோஷமாக உள்ளது. முதலில் சினிமாவில் நிரந்தரமாக ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே இப்போதைய என் ஆசை. அரசியலுக்கு வருவீர்களா என்கிறார்கள். முதலில் சினிமா... அதன்பிறகு மற்றதையெல்லாம் பார்க்கலாம். காதலித்து திருமணம் செய்வதில்தான் எனக்கு நம்பிக்கை. அதனால் நல்ல காதலனுக்காக காத்திருக்கிறேன், என்று கூறியுள்ளார்.