டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வருகிற டிசம்பர் 12ம்தேதி ரஜினி பிறந்தநாளில் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. கார்த்தி, அனுஷ்கா இருவரும் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இப்படத்தை டைரக்டர் சுராஜ் இயக்குகிறார். சிறுத்தை, சகுனி படங்களுக்குப் பிறகு மீண்டும் கார்த்தி - சந்தானம் கூட்டணி இப்படத்திலும் காமெடியில் கலக்க களம் இறங்கியிருக்கிறார்கள். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டை வரும் டிசம்பர் 12ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர். டிசம்பர் 12ம்தேதி நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாள். அவர் மூன்று முகம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த கதாபாத்திரத்தின் பெயர் அலெக்ஸ் பாண்டியன். ஆகவே, அவருடைய பிறந்தநாளிலேயே இந்த படத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.