Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கடல், நீர்ப்பறவைக்காக காத்திருக்கும் தனுஷின் மரியான்!

Dhanushs Mariyaan team waiting for Kadal and Neerparavaiதற்போது மணிரத்னம் இயக்கும் கடல் மற்றும் சீனுராமசாமி இயக்கும் நீர்ப்பறவை ஆகிய இரண்டு படங்களுமே கடல்சார்ந்த மக்களின் வாழ்வியல் பிரச்னையை மையமாக வைத்து உருவாகியுள்ளன. ஆனால் மணிரத்னத்தின் மேக்கிங் ஸ்டைல் என்பது வேறு மாதிரியாக இருக்கும் என்பதால், என்னதான் இரண்டு கதையிலும் ஒரே மாதிரியான நெடி அடித்தாலும், கதையோட்டம், காட்சி அமைப்புகள் கண்டிப்பாக வெவ்வேறாகத்தான் இருக்கும் என்பதை இரண்டுதரப்பினருமே யூகித்துக்கொண்டார்கள்.

ஆனால் பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மரியான் படமும் இதேபோன்று கடல்சார்ந்த மக்களின் பிரச்னையை மையமாக வைத்துதான் உருவாகி வருகிறது. அதனால் கடல், நீர்ப்பறவை படங்களில் சாயல் இருந்தால் அதை நீக்கி விட்டு புதுமையான காட்சிகளை புகுத்திவிட வேண்டும் என்று மேற்படி படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்கள். அதன்காரணமாகத்தான், மரியான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட தனுஷ், இப்போது ராஞ்சனா இந்தி படத்தை முதலில் முடித்துக்கொடுத்து விட்டு பின்னர் தமிழுக்கு வரலாம் என்று மும்பையில் முகாமிட்டுள்ளார்.

Tags »
Dhanush, Mariyaan, தனுஷ், மரியான்,
Share  
Bookmark and Share

தொடர்புடையவை



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in