தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபச்சார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் |
பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், சதுரங்கம் போன்ற படங்களை இயக்கிய கரு.பழனியப்பனுக்கு நடிப்பு ஆசை வர அடுத்து தான் இயக்கிய மந்திரப்புன்னகை படத்தை இயக்கியதோடு மட்டும் இல்லாமல் அப்படத்தின் ஹீரோவாகவும் நடித்தார். இப்போது சிறிது இடைவெளிக்கு பிறகு "ஜன்னல் ஓரம்" என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகனாக விமலும், முக்கிய கதாபாத்திரத்தில் மைனா விதார்த்தும், பார்த்திபனும் நடிக்கின்றனர். ஹீரோயினாக பூர்ணாவும், இன்னொரு ஹீரோயினாக வழக்கு எண் 18/9 மனிஷாவும் நடிக்கின்றனர். ஹேமந்த் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 26ம் தேதி முதல் துவங்கி கம்பம், குமுளி, வாகமன் போன்ற பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இதனிடையே இப்படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஒருபடத்தின் ரீ-மேக் என்று கோடம்பாக்கத்தில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.