இலக்கியவாதிகள் சினிமாவுக்குள் வரவேண்டும்! சொல்கிறார் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் - Literary should come to cinema says Niranjan
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இலக்கியவாதிகள் சினிமாவுக்குள் வரவேண்டும்! சொல்கிறார் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன்

24 நவ, 2012 - 15:36 IST
எழுத்தின் அளவு:

புதுமுக இயக்குனர் இப்ராகிம் இயக்கத்தில், புதுமுங்கள் நடித்த பூர்வகுடி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள் எழுத்தாளர்கள் கலந்து கொண்டு பேசினர். விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது, மிக இயல்பாக தன் கருத்துக்களை பதிவு செய்தார். அப்போது இந்த படத்தில் இலக்கிய உலகில் நீண்ட காலமாக இருந்து வரும் தமிழ்மணவாளன் வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார், இது வரவேற்கதக்கது. இது இயக்குனர்களின் காலம், இலக்கிய வழி வந்தவர்கள் இலக்கிய தீபத்தை ஏந்திக்கொண்டு சினிமாவுக்குள்  வருகின்றனர். இது ஆரோக்கியமான விஷயம். இலக்கிய  வாதிகள் சினிமாவுக்குள் வந்தால் சினிமா இன்னும் செழிக்கும். மலையாள சினிமாவில் கதைகள் இன்றும் பேசப்படுவது ஏன் என்றால் எம்.டி.வாசுதேவநாயன் அவர்கள் உள்ளே வந்தார். வங்கதேச கதைகள் பேசப்படுகிறது என்றால் எழுத்தாளர்கள் அதிகம் உள்ளே வந்தனர். சத்யஜித்ரே வால் சிறந்த கதைகள்  எப்படி கொடுக்க முடிந்தது என்றால் பக்கத்தில் எழுத்தாளர்கள் பலரும் இருந்தனர். விபூதி பூஷன்  என்ற எழுத்தாளர் எழுதிய நாவலை வைத்து மூன்று வெற்றி படங்களை கொடுத்தார். அதில் ஒன்று தான் பதேர் பாஞ்சாலி. சிறந்த படங்கள் எப்போதும் இலக்கியம் பேசப்பட்டவையாக பாராட்டப்பட்டவையாக இருக்கும். எனவே இலக்கியவாதிகள் பலரும் சினிமாவுக்குள் வரவேண்டும் அப்படி வந்தால் சினிமா
இன்னும் இன்னும் செழிக்கும் என்றார் பிரபஞ்சன்.

Advertisement
இந்தி துப்பாக்கியில் பணியாற்ற சந்தோஷ் சிவன் மறுப்புஇந்தி துப்பாக்கியில் பணியாற்ற ... கரு.பழனியப்பனின் ஜன்னல் ஓரம் கரு.பழனியப்பனின் ஜன்னல் ஓரம்


வாசகர் கருத்து (1)

lotus - singapor  ( Posted via: Dinamalar Android App )
24 நவ, 2012 - 16:10 Report Abuse
lotus அப்பவாச்சும் உருப்படியா ஏதாச்சும் பன்றாங்கலானு பார்ப்போம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film 88
  • 88
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :எம்.மதன்
  Tamil New Film vikram veda
  • விக்ரம் வேதா
  • நடிகர் : விஜய் சேதுபதி ,
  • நடிகை : வரலெட்சுமி
  • இயக்குனர் :புஷ்கர் - காயத்ரி
  Tamil New Film thiri
  • திரி
  • நடிகர் : அஸ்வின் காக்மானு
  • நடிகை : சுவாதி ரெட்டி
  • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
  Tamil New Film Ivan Yaarendru Therigiradhaa

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in