Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் »

லைப் ஆப் பை ஹீரோவிற்கு மன நிம்மதி!!

Suraj Sharma get relief! goa film festivalஹாலிவுட் டைரக்டர் ஆங்-லீயின் இயக்கத்தில் வெளியாகி உள்ள லைப் ஆப் பை படத்தில் 19வயது இளைஞனாக புலியுடன் சேர்ந்து நடித்திருப்பவர் டில்லியை சேர்ந்த சூரஜ் சர்மா. இவர் டில்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லைப் ஆப் பை பட வாய்ப்பால் இவர் சரியாக கல்லூரிக்கு போகவில்லை. இதனால் கல்லூரி நிர்வாகம் இவரை செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்று ஏற்கன‌வே செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில் கல்லூரி நிர்வாக சற்று மனம் இறங்கி சூரஜ் சர்மாவை தேர்வு எழுத அனுமதித்துள்ளது. கூடவே லைப் ஆப் பை படத்தில் நடித்த அனுபவம் பற்றி 1200 வார்த்தைகளில் ஒரு கட்டுரையும் எழுதி தர வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது. ஆங்கில மற்றும் இந்திப்படங்களில் இந்த அழகான செயல் படங்களில் நடித்து வரும் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி தர வாய்ப்பாக அமைகிறது.

Tags »
Suraj Sharma, Life of pi, goa film festival, சுராஜ் சர்மா, லைப் ஆப் பை, கோவா திரைப்பட விழா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in