வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!! | தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! | சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! | விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...! | 2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு! | ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!! | நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! ஸ்ருதிஹாசன் | ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! |
தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமானவர் மீனாள். அதன்பிறகு குணசித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். பள்ளிக்கூடம் படத்திலும், சமீபத்தில் வெளியான அம்மாவின் கைபேசி படத்திலும் தங்கர் பச்சானின் மனைவியாக நடித்துள்ளார். தற்போது அவர் பாரதிராஜா இயக்கும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்து வருகிறார். கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக வாழும் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது "குணசித்திர நடிகையாக அறிமுகமானேன். தொடர்ந்து அப்படியே நடித்து வருகிறேன். அன்னக்கொடியும் கொடிவீரனும் எனக்கு திருப்புமுனையாக அமையும். காரணம் கிராமத்து பாலியல் தொழிலாளியாக இதுவரை யாரும் நடித்திராக வகையில் என்னை பாரதிராஜா சார் நடிக்க வைத்திருக்கிறார். இதுதவிர மச்சான், கலியுகம் படங்களிலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறேன்" என்றார்