Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓடிடி தளம் தொடங்குகிறார் டி.ராஜேந்தர்

27 மார், 2021 - 11:57 IST
எழுத்தின் அளவு:
T-Rajendar-to-start-OTT

ராசுமதுரவன், மனோஜ்குமார், தருண்கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த மாணிக்க வித்யா இயக்கியுள்ள படம் தண்ணிவண்டி. தம்பி ராமைய்யா மகன் உமாபதி, சம்ஸ்கிருதி நடித்துள்ளனர், பாலசரவணன், தம்பி ராமய்யா, தேவதர்ஷினி, வினுதலால், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. டீசரை இயக்குனர் டி.ராஜேந்தர் வெளியிட்டு பேசியதாவது: ஓடிடி என்பது காலத்தின் கட்டாயம். அடுத்த கட்டம் ஓடிடி தளம் என்பதால் நான் கூட ஒடிடி தளம் துவங்குவேன் . எதற்கு என்றால் சிறிய தயாரிப்பாளர்களுக்கும், புதிய இயக்குநர்களுக்கும், போராடும் படைப்பாளிகளுக்கு தேவை ஒரு தளம். அதற்கு நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம் ஒரு களம்.

தியேட்டரில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று நான் பல காலமாக சொல்லி வருகிறேன். ரயிலில் கூட பர்ஸ்ட் க்ளாஸ், செகண்ட் க்ளாஸ் இருக்கு. சினிமா தியேட்டரில் மட்டும் எல்லாம் ஒரே சீட்டு. இது என்ன சர்வதிகார நாடா? இல்ல ஜனநாயக நாடா? டிக்கெட் 100,150 என்று இருந்தால் ஒரு ஏழை எப்படி குடும்பத்தோடு படம் பார்க்க முடியும்?.

டிக்கெட் ரேட் தான் அதிகமென்றால் பாப்கார்ன் விலை 150 ரூபாய். ஆந்திராவில் இன்றும் படம் ஓடுகிறது என்றால் 50 ரூபாய் 70 ரூபாய் தான் டிக்கெட். டிக்கெட் கட்டணம் குறைக்க வேண்டும் என்று பேசுவதற்கு ஏன் யாருக்கும் துணிவில்லை? மனமில்லை? டிக்கெட் விலையை குறைத்தால் சிறியபடங்கள் வாழும்.

இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் திருமண அறிவிப்பு ?நயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் ... இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 'மாநாடு' இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

29 மார், 2021 - 00:51 Report Abuse
சமநிலை மூர்த்தி ஹேய் டண்டணக்கா டணக்குணக்கா
Rate this:
navasathishkumar - MADURAI,இந்தியா
27 மார், 2021 - 13:26 Report Abuse
navasathishkumar இது சரியான வழி....ஓ டி டி யில் வெளியிடுவதில் லாபமும் பார்க்க முடியும்..சேட்டிலைட் சேனல்களின் பிடியிலிருந்தும் விலகலாம்...மேலும் இவை எல்லாம் டேட்டா கன்சூயும் செய்யும் ஆகவே ஒரு மணி நேரத்திற்குள் இல்லை ஒன்னறை ஹவரில் தமிழ் படம் சொல்லி பழகுங்கள்.ஆங்கில படங்கள் இதை செய்ததால் ஒன்றும் வசூலில் கெட வில்லை. வாழ்த்துக்கள்:
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in