Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மாஸ்டர்' வசனம் - 'ஜியாகிரபி' தெரியாதவர்கள் : இயக்குனர் அகத்தியன் கிண்டல்

25 மார், 2021 - 19:12 IST
எழுத்தின் அளவு:
No-one-know-the-Geography-says-Director-Agathiyan

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'மாஸ்டர்'. அப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தை குடிகாரராகவும், இஷ்டத்துக்கு பொய் சொல்பவராகவும் ஆரம்பத்தில் அமைத்திருப்பார்கள்.

அப்படியான சில காட்சிகளில் அஜித் நடித்த 'காதல் கோட்டை' படத்தில் அஜித்திற்காக தேவயானி பரிசளிக்கும் ஸ்வெட்டரைப் பற்றிக் கிண்டலடித்து வசனம் பேசி ஒரு காட்சி வைத்திருந்தார்கள்.விஜய் சொல்லும் கதையைக் கேட்டு, “ராஜஸ்தான்ல அடிக்கிற குளிருக்கு எதுக்கு ஸ்வெட்டரு” என 'மாஸ்டர்' படத்தில் நாயகி மாளவிகா பேசுவார்.

ராஜஸ்தான் என்றாலே அங்கு வெயில் அதிகமாக இருக்கும். அங்கிருப்பவருக்கு எதற்கு ஸ்வெட்டர் என்றுதான் 'மாஸ்டர்' காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் 'காதல் கோட்டை' படத்தை இயக்கிய அகத்தியன் அந்த கிண்டல் வசனம் குறித்து பதிலடியாகக் கிண்டலடித்துள்ளார்.

“ராஜஸ்தான்ல எப்படி குளிர் இருக்கும்னு அங்க போய் பார்த்தால்தான் தெரியும். ஜியாகிரபியைப் பொறுத்த அளவுல அது தப்பில்ல, மிகச் சரியான விஷயம். அதை தப்புன்னு யோசிக்கிறாங்கன்னா அவங்களுக்கு ஜியாகிரபி தெரியலன்னு அர்த்தம்” எனக் கூறியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஜியாகிரபி தெரியாமல் 'மாஸ்டர்' படத்தில் அப்படி ஒரு வசனத்தை வைத்தது அஜித் படத்தை வேண்டுமென்றே கிண்டலடிக்கத்தான் என்பது இப்போது புரிகறது என பல ரசிகர்கள் அதற்கு கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் வரும் பூஜா ஹெக்டே : மீண்டு வருவாரா ?மீண்டும் வரும் பூஜா ஹெக்டே : மீண்டு ... டிவியில் நேரடியாக வெளியாகும் 'மண்டேலா' டிவியில் நேரடியாக வெளியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

krishna - chennai,இந்தியா
30 மார், 2021 - 19:18 Report Abuse
krishna அஜித் விஜய் ரசிகர்கள் ஆன் லைனில் எப்போதும் சண்டை போட்டுக் கொள்வார்கள் இப்படி ஒரு விஷயம் சொன்னால் அவ்வளவுதான்
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
27 மார், 2021 - 11:07 Report Abuse
Raja பாலைவன பகுதிகளில் நான் வாழ்ந்துள்ளேன். மற்ற பகுதிகளில் உள்ள குளிரை காட்டிலும் அங்கு அதிக குளிர் இருக்கும். பாலைவனம் என்றாலே வெயில் என்ற பொது கருத்து உள்ளது.
Rate this:
26 மார், 2021 - 02:14 Report Abuse
Common man சரியாகச் சொன்னீர்கள் அகத்தியன்! ராஜஸ்தானின் சில இடங்களில் இரவு நேர குளிர் -2 டிகிரி வரை செல்கிறது. பாலைவனப் பகுதிகளில் இரவு நேரங்களில் கடும் குளிர் வீசூம் என்கிற ஐந்தாம் வகுப்பு பூகோளம் தெரியாத பூஜ்யங்கள்! யாரையோ குளிர்விக்க செய்கிறோம் என்று எண்ணிக் கொண்டு பெரும்பாலும் வன்முறையை மட்டுமே வைத்து சினிமா செய்பவர்கள் தாமே அறியாமல் தங்களுடடய அறிவிலித்தனத்தை வெளிப்படுத்தி விடுகிறார்கள்!
Rate this:
25 மார், 2021 - 20:40 Report Abuse
ilàiyaraja vaarisu nadigargal puthi avlothan..... ithe pondru Surya padangalilum Vikram ai kindal panuvathai paarkalaam......
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
25 மார், 2021 - 20:22 Report Abuse
vira சரியான அர்த்தம் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள் மக்களை ஏன் தூண்டி விடுகிறீர்கள்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in