ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் படங்களின் தலைப்புகளை 3 இடங்களில் பதிவு செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று டைரக்டர் ஜனநாதன் கோரிக்கை வைத்துள்ளார். ஹரீஷ் கல்யாண்–பூனம் கவுர் ஜோடியாக நடித்த கெஸ்ட் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக டைரக்டர் ஜனநாதன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்த படத்துக்கு முதலில் அக்கம் பக்கம் என்று பெயர் சூட்டியிருந்தார்கள். இந்த பெயரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவும் செய்திருந்தார்கள். ஆனால் இதே பெயரை கில்டில் பதிவு செய்திருப்பதாக இன்னொருவர் சொந்தம் கொண்டாடினார். வேறு வழியில்லாமல், படத்தின் தலைப்பை கெஸ்ட் என்று மாற்றியிருக்கிறார்கள். விஞ்ஞானம் வளர்ந்த நிலையிலும், படத்தின் தலைப்புகளை நாம் பழைய முறையிலேயே பதிவு செய்கிறோம். இதனால் கோர்ட்டு வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆந்திராவில் இந்த பிரச்னை இல்லை. அங்கு ஒரே இடத்தில்தான் தலைப்பை பதிவு செய்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தயாரிப்பாளர்கள் சங்கம், பிலிம்சேம்பர், கில்டு என மூன்று இடங்களில் பதிவு செய்யும் முறை உள்ளது. இதற்கு பதில், ஆன்லைனில் பதிவு செய்தால், சர்ச்சைகள் ஏற்படாது. இதுபற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு, டைரக்டர்கள் சங்கம் கடிதம் எழுதியிருக்கிறது, என்றார்.