Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

சூப்பர் ஸ்டாரை இயக்கும் அனுபவம் எனக்கு பத்தாது: ஐஸ்வர்யா தனுஷ்!! கோவா ஸ்பெஷல்

23 நவ, 2012 - 16:13 IST
எழுத்தின் அளவு:

இந்திய திரைப்படத்தில் வரவேற்கத் தக்க புதுமைகள், மாறுதல்களை சமீபத்தில் ஏற்படுத்தியிருக்கும் இளம் இயக்குனர்கள் என்று ஆஸ்கார் விருது பெற்றுள்ள ஒலிப்பதிவு நிபுணர் ரசூல்குட்டி, , ஐஸ்வர்யா தனுஷ், கௌரி ஷிண்டே, ஒனிர் மூவரையும் மீடியா சந்திப்பில் அறிமுகப்படுத்தினார்.

ஐஸ்வர்யா தனுஷ்: அடுத்து வரும் உங்கள் படத்தில் உங்கள் தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைப்பீர்களா? என்று (நான்) கேட்டதற்கு, என் குடும்பத்தில் என் வீட்டில் இருக்கிறார்கள் என்பதால் என் அப்பாவையோ, கணவரையோ, என் படத்தில் நடிக்கச் சொல்வது சரியல்ல. இப்போதுதான் நான் ஒரு படம் எடுத்திருக்கிறேன். சூப்பர் ஸ்டாரை அவ்வளவு பெரிய ஸ்டாரை வைத்து படம் இயக்கும் அனுபவம் எனக்கு இப்போது இன்னும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மேலும் அவர் கூறியது. நான் ஆறு வருடம் கழித்து இப்போதுதான் கோவாவிற்கு வருகிறேன். எதுவும் மாறியிருப்பது போல எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு டைரக்டரும் தன் படம், மக்களைச் சென்று அடைய வேண்டும், படம் வெற்றி பெற வேண்டும் என்றுதான் விரும்புகிறார். இந்த பாரடைம் ஷிஃப்ட் பாரலல் சினிமா எல்லாம் வார்த்தைகள் தான். தனது கவலை, கஷ்டம் எல்லாம் முடிந்து தியேட்டருக்கு வரும் ரசிகருக்கு படம் பிடிக்க வேண்டும் அதுதான் முக்கியம். கொலைவெறி பாடல் இந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று நாங்கள் நினைக்கவில்லை, இந்த மாபெரும் வெற்றி பெற்றுக் கொடுத்ததற்கு, ரசிகர்களுக்கும், கடவுளுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். “3’ படத்தை தொடர்ந்து அடுத்த படத்தின் கதைக்காக ஓர்க் பண்ணிக் கொண்டு இருக்கிறேன். அது இரு மொழிகளில் அமையுமா என்று கேட்டதற்கு இரு மொழிகளில் படம் பண்ண எந்த டைரக்கடருக்குத் தான் ஆசை இருக்காது என்றார். சரளமாக, எளிமையாக பேசி, அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

கௌரி ஷிண்டே: ஸ்ரீதேவியை பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தனது இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடிக்க வைத்து வியாபார ரீதியிலம் வெற்றி பெற்ற கௌரி ஷிண்டே, “இந்த படம் எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். ஆர்ட் சினிமா பாரலல் சினிமா என்று சினிமாவை பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. சினிமா சினிமா தான்.’மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளுவது பற்றி மராத்தியில் “கப்ரிச்சா பௌ’ என்ற படம் பிரமாதமாக இருக்கிறது. ஒரு முக்கிய பிரச்னையை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்கள். அதைப்பற்றி உங்களை சிந்திக்க வைத்தால், உங்களுக்குப் பிடித்திருந்தால் அது நல்ல படம்.

ஒனிர்: ஐ ஆம், மை பிரதர் நிகில் போன்ற படங்களின் இயக்குனர். பெரிய, கமர்ஷியல் படங்கள்தான் தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது ரிலீஸ் ஆக வேண்டுமா? சிறு பட்ஜெட் படங்களை பண்டிகை காலங்களில் ரிலீஸ் பண்ண வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்தியாவில் பல மொழிகளில் சிறந்த படங்கள் வருகின்றன. அவற்றை அனைவரும், பார்க்கும்படி வகை செய்ய வேண்டும்.

ரசூல்குட்டி: சினிமாவிற்கு மொழி வித்தியாசம் கிடையாது. ஹாலிவுட், ஆங்கிலம், இந்தி, மராத்தி, தமிழ், மலையாளம், கொங்குனி என்று பலமொழிப் படங்களில் நான் பணிபுரிகிறேன் என்று ஆரம்பித்தார் ஸ்லம் டாக் மிலினியர் படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற ஒலிப்பதிவு நிபுணர் ரசூல்குட்டி. கேரளாவில் எங்கள் கிராமத்தில் இருந்து பத்து கிலோ மீட்டர் சென்று தியேட்டர்களில் படங்களை பார்ப்போம். இப்போது மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் வந்து, தனி தியேட்டர்களை அழித்து விட்டன. நான் சொன்ன மூன்று தியேட்டர்களில், இரண்டு தியேட்டர்கள் இப்போது திருமண மண்டபங்களாக ஆகிவிட்டன. ஆடியன்ஸை, வீட்டிலிருந்து தியேட்டருக்கு இழுத்து வர வேண்டிய கஷ்டமான, முக்கியமான பொறுப்பு இப்போது பிலிம் மேக்கர்களுக்கு இருக்கிறது. இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஐ.டி. என்று மலையாளப் படத்தின் தாயாரிப்பாளர்களில் ரசூல்குட்டியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

karthik - kuwait  ( Posted via: Dinamalar Android App )
23 நவ, 2012 - 18:00 Report Abuse
karthik what changes has aishwarya danush done for indian cinema or tamil cinema . just directed one flop film. y do these people celebrate this much. ok aiswarya is talented but not a big person as they boost like she is going to bring a change
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in