Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மீடியாக்களைக் கண்டு ஓடி ஒளியும் அமலாபால்!

Amala Paul hiding over mediaவீரசேகரன், சிந்து சமவெளி, மைனா படங்களில் நடித்து வந்தநேரம், மீடியாக்களைத்தேடி அமலாபால் ஓடிக்கொண்டிருந்தார். ஆனால் இப்போதோ, யாராவது மீடியாக்காரர்கள் வருகிறார்கள் என்றால் ஓடி ஒளிகிறார். ஏன் என்ன காரணம்? என்று அவரைக்கேட்டால், என்னை சந்திப்பவர்கள் ஒருவர்கூட நான் என்னென்ன படங்களில், எந்த மாதிரி கேரக்டர்களில் நடிக்கிறேன் என்று கேட்பதில்லை. வந்த வேகத்தில டைரக்டர் விஜய்யை நான் காதலிப்பதாக சொல்லி, அந்த காதல் எப்போது கல்யாணத்தில் முடியப்போகிறது என்றுதான் கேட்கிறார்கள். தெய்வத்திருமகள் என்ற ஒரு படத்தில்தான் அவருடன் நடித்தேன். அதன்பிறகு இப்போது விஜய் சாரை அவர் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறேன். இதற்கிடையே ஓரிரு முறைதான் நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் ரகசியமாக காதலிப்பதாக செய்தி எழுதுகிறார்கள். இப்போது கல்யாணம் வரை வந்து விட்டார்கள்.

டைரக்டர் விஜய்யுடன் நான் கொண்ட நட்பை இப்படி காதல் கீதல் என்று கொச்சைப்படுத்துவது மனதுக்கு ரொம்ப வேதனையாக உள்ளது. அதனால்தான் சமீபகாலமாக மீடியாக்களை சந்திக்க பிடிக்கவில்லை. விழாக்களுக்கு செல்லும இடங்களில்கூட யாராவது மீடியாக்காரர்கள் வந்திருந்தால், ஓடி ஒளியும் மனநிலையில் இருக்கிறேன் என்கிறார் அமலாபால்.

Tags »
Amala Paul, அமலாபால்,
Share  
Bookmark and Share

தொடர்புடையவை



வாசகர் கருத்து (3)

மதுரை சிங்கம் - doha ,கத்தார்
2012-11-21 10:20:43 Report Abuse
 மதுரை சிங்கம் அப்பாடா விஜய் தப்பிச்சாரூ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Manohar - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
2012-11-21 00:44:48 Report Abuse
Manohar நல்லது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
udaya kumar - salem  ( Posted via: Dinamalar Windows App )
2012-11-20 22:22:18 Report Abuse
udaya kumar நல்லது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 0 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in