பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் திரையுலகிற்கு, வித்தியாசமான கதைக் களத்தை அறிமுகம் செய்து வைத்த, இயக்குனர் பாலாவின் அடுத்த படைப்பு. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், 1930 களில் நடந்த, கதையை மையமாக வைத்து பரதேசியை இயக்கியுள்ளார். "சாக்லேட் பாய் இமேஜுடன் வலம் வரும், அதர்வாவை, இந்த படத்தில், ஒட்டு மொத்தமாக உருமாற்றியுள்ளார் பாலா. இந்த படத்தில் நடிப்பதற்காக, தன் உடல் எடையை, பத்து கிலோ குறைத்துள்ளார், அதர்வா. தன்ஷிகா, வேதிகா, உமா உள்ளிட்டோரும், படத்தில், கனமான வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாலாவின் படங்களுக்கு, தமிழ் சினிமா ரசிகர்களிடையே, பொதுவாகவே பெரும் எதிர்பார்ப்பு உண்டு. இந்த படத்தின் ஸ்டில்களே, மனதை பதற வைக்கும் அளவுக்கு, மிரட்டலாக இருப்பதால், பரதேசிக்கான எதிர்பார்ப்பு, சற்று அதிகமாகவே உள்ளது.