ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
"காஞ்சனா கன்னட "ரீ-மேக்கில் நடித்து வரும் லட்சுமி ராய், தமிழ், தெலுங்கில் போதிய பட வாய்ப்பு இல்லாததால், அடுத்து கன்னடத்திலேயே முழுநேர நடிகையாக முடிவு செய்திருந்தார். ஆனால், அப்படி அவர் முடிவெடுத்த நேரம் பார்த்து, தமிழில் வினய்க்கு ஜோடியாக, "ஒன்பதுல குரு பட சான்ஸ் கிடைத்ததோடு, இப்போது பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கும், புதிய படத்திலும், அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அத்துடன், இப்படம் தமிழ், தெலுங்கு என, இரு மொழிகளிலும் தயாராவதால், மீண்டும் பிசியான நடிகைகளின் பட்டியலில் இணைந்து விட்டார் லட்சுமி ராய். "கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் கனவு. அது, இப்போது நனவாகிவிட்டது, எனக்கு மனதளவில் மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்கிறார் அவர்.