'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
சமீபகாலமாக படங்களுக்கு கதை யோசிப்பதை விட டைட்டீல் யோசிப்பதில்தான் அதிக காலத்தை செலவிடுகிறார்கள் இயக்குனர்கள். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் அதற்கான தலைப்பு என்னவென்று முடிவு செய்யவில்லையாம். அதேபோல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில விஜய் நடிக்கவுள்ள படத்துக்கும் இன்னும் தலைப்பு வைக்கவில்லை என்கிறார்கள்.
தாண்டவம் படத்தை இயக்கி வந்தபோது, விஜய்யின் புதிய படத்துக்கு தலைவன் என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார் ஏ.எல்.விஜய். ஆனால் அந்த தலைப்பில் ஒரு படம் தற்போது வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் ஏற்கனவே துப்பாக்கி டைட்டீல் பிரச்சினை பூதாகரமாக வெடித்து, அதுவே விஜய்தரப்புக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்ததால், இந்த முறையும் அதுபோன்ற பிரச்சினை வேண்டாம் என்று தலைவன் டைட்டீலுக்காக பிரச்சினை செய்யப்போவதில்லை. வேறு டைட்டீல் யோசிக்கப்போகிறேன் என்கிறார் ஏ.எல்.விஜய். இம்மாதம் இறுதியில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக சொல்லும் இயக்குனர், அதற்கு முன்பே டைட்டீலை வெளியிட்டு விடுவேன் என்று தனது இலாகாவுடன் மூளையை கசக்கிக்கொண்டிருக்கிறார்.