ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்தி நடிக்கும், "பிரியாணி படத்தில் இருந்து, ரிச்சா வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த கதாபாத்திரத்திற்கு, ஹன்சிகா ஒப்பந்தமாகி உள்ளார். அவரை தொடர்ந்து, மற்றொரு நாயகியாக, லண்டனைச் சேர்ந்த, மேன்டி தகஹார் என்ற நடிகையும், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபி மொழியில், பல படங்களில் நடித்துள்ள இவர், "மேம்புஎன்ற இந்தி படத்தில், நீச்சல் உடையில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்றாலும், "பிரியாணி படத்தில், விரசமில்லாத கவர்ச்சி காண்பித்து நடிக்கிறார். இந்த வேடத்தில் நடிக்க, நயன்தாராவிடம் தான், முன்பு கால்ஷீட் கேட்டுள்ளார், இயக்குனர். கால்ஷீட்டுக்காக, இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதால், லண்டன் நடிகையை ஒப்பந்தம் செய்து, படப்பிடிப்பை துவங்கிவிட்டார்.