Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் ?

08 பிப், 2021 - 15:55 IST
எழுத்தின் அளவு:
Rajini-again-in-Karthik-subbaraj-direction

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ் ஏற்கெனவே ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தை இயக்கினார். அந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படத்தை இயக்கி முடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

அடுத்து விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தை இயக்கி முடித்த பிறகு மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசியலை விட்டு விலக முடிவெடுத்த பின் தொடர்ந்து படங்களில் நடிக்க ரஜினிகாந்த் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 'அண்ணாத்த' படத்திற்குப் பிறகு அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கலாம் என்கிறார்கள்.

ஏற்கெனவே, கேஎஸ் ரவிக்குமாரிடமும் மீண்டும் 'ராணா' படத்தின் கதையைக் கேட்டுள்ளார். அவரும் அக்கதையை மீண்டும் அவருக்கு சொல்லி உள்ளார். நின்று போன 'ராணா' படம் கூட மீண்டும் எடுக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

'அண்ணாத்த' படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில்தான் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க உள்ள படம் எது என்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
அதிக குறும்படங்களை இயக்கிய கவுதம் மேனன்அதிக குறும்படங்களை இயக்கிய கவுதம் ... தனுஷிடம் நிறைய கற்றுக் கொண்டேன் : மாளவிகா மோகனன் தனுஷிடம் நிறைய கற்றுக் கொண்டேன் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

KALAIVANI K - TINDIVANAM,இந்தியா
09 பிப், 2021 - 16:47 Report Abuse
KALAIVANI K சினிமா என்றால் மட்டும் உடல் ஒத்துழைக்குமா
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
09 பிப், 2021 - 16:32 Report Abuse
Sathish ஐநூறு என்ன ஆயிரம் ரூபாய் ஆனாலும் கொடுத்து டிக்கெட் வாங்கி, பட்டாசு வெடித்து, கட்டவுட் வெச்சு படம் பார்க்க ஆள் இருக்கு அப்புறம் என்ன. சினிமா ரசிகர்களுக்கு நாடு எப்படி போனா என்னப்பா.
Rate this:
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
09 பிப், 2021 - 15:56 Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  அப்ப மறுபடியும் அரசியலுக்கு வருவாரா... என்னமோ போங்க.
Rate this:
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
09 பிப், 2021 - 13:59 Report Abuse
Aanandh இந்தாளை நம்பி இனிமேல் படம் எடுக்கும் ஏமாளிகளே அது நொண்டிக்குதிரையை நம்பி பந்தயத்தில் பணம் போடுவது போல. இவனை நம்ப யாரும் தயாரில்லை. சில பைத்தியங்க ளும் சீக்கி ரம் தெளிவு பெற்றுவிடும். சுரண்டியது போதுமென் று, இவனை கர்நாடகப் பக்கம் துரத்துவது நல்லது.
Rate this:
Kannan - Coimbatore,இந்தியா
09 பிப், 2021 - 12:37 Report Abuse
Kannan விட்டுடுங்க அவரை பாவம் வயசான காலத்துல நிம்மதியா ரெஸ்ட் எடுக்க விடுங்கப்பா. ஒரே ஆளபுடிசிச்சு தொங்காதீங்க.
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in